பாடல் #3190
பரனே திருக்கடைக்கண்
🔤 Paranae Thirukkataikkan
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரனே, திருக்கடைக்கண் பாராயோ? என்றன் பாவத்துயர் அனைத்தும் ராயோ? 1.திறம் இலாத எனைமுனியாமல்- யான் செய்த குற்றம் ஒன்றும் நினையாமல் 2.மாயவலையில்பட்டுச்சிக்காமல்-லோக வாழ்வில் மயங்கி மனம் புக்காமல் 3.அடியேனுக்கருள்செய்இப்போது-உன தடிமைக் குன்னை அன்றிக் கதி ஏது? 4.வஞ்சகக்கவலை கெடுத்தோட்டாயோ?- என்றன் மனது களிக்க வர மாட்டாயோ? 5.ஏசுவின் முகத்துக் காய் மாத்ரம் -எனக் கிரக்கம் செய்யும் உமக்கே தோத்ரம்! 6. ஆதியந்த மில்லாத சருவேசா நித்திய அளவிலாத சத்திய வாசா. 7.தேசுலாவு திரித்துவ தேவே யெந்தன் சிந்தை மகிழ்த் துணைப் பதந்தாவே 8. வேதநாயக வாணன் பாட்டுக் கென் மேல் மேன்மையான தயவைக் காட்டு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paranae, Thirukkataikkan Paaraayo? Endran Paavatthuyar Anaitthum Raayo? 1.thiram Ilaadha Enaimuniyaamal- Yaan Seytha Kurtram Onrum Ninaiyaamal 2.maayavalaiyilpattuchsikkaamal-loga Vaazhvil Mayangki Manam Pukkaamal 3.atiyaenukkarulseyippothu-una Thatimaik Kunnai Anrik Kathi Aethu? 4.vanjjakakkavalai Ketutthottaayo?- Endran Manathu Kalikka Vara Maattaayo? 5.aesuvin Mugatthuk Kaay Maathram -enak Kirakkam Seyyum Umakkae Thothram! 6. Aathiyandha Millaadha Saruvaesaa Nitthiya Alavilaadha Satthiya Vaasaa. 7.thaesulaavu Thiritthuva Thaevae Yendhan Sinthai Makizhth Thunaip Pathanthaavae 8. Vaedhanaayaka Vaanan Paattuk Ken Mael Maenmaiyaana Thayavaik Kaattu