பாடல் #3189
பரத்தை நாடிப்போக நெஞ்சே விழித்திரு
🎙 கிறிஸ்தவ பாடல்
1. பரத்தை நாடிப்போக நெஞ்சே விழித்திரு இனி பொய்யான லோகவாழ்வை வெறுத்திரு சீயோனின் மேன்மையான வாசஸ்தலங்கள் காண விருப்பம் இல்லையா? பரத்தை நாடிப்போ. 2. கட்டுண்டாயோ? அத்தாலே அஞ்சாதே ரட்சகர் தம் மரணத்தினாலே உன் க்லேசம் நீக்கினார் உன் கட்டவிழ்க்கக் கர்த்தர் ஒருவரே சமர்த்தர் அவரை நம்பாயோ? பரத்தை நாடிப்போ. 3. பிதா இரக்கமாக எதிர் கொள்ளுவாரே உன்னை எப்போதுமாக மேன்மைப்படுத்துவார் இரட்சகர் அளிக்கும் மெய்நீதிக்கும் கதிக்கும் நீ ஆசைப்படாயோ? பரத்தை நாடிப்போ. 4. ஆனால் என் வாஞ்சை யாவும் தெய்வீக சித்தத்தில் அடங்க நீர் உசாவும் கர்த்தா இவ்வுலகில் உமதழைப்புக்காக நான் காத்திருப்பேனாக உம்மை நான் நம்பினேன் நீர் என்னை ஆற்றுமேன்.