பாடல் #31815
நான் ஆயத்தமானேன் ஆண்டவரை
🔤 Naan Aayatthamaanaen Aandavarai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் ஆயத்தமானேன் ஆண்டவரை சந்திக்க நித்திய மகிழ்ச்சி அடைவேன் மத்திய ஆகாய மீதிலே மன்னன் இயேசுவைக் காணுவேன் 1. மணவாளன் தட்டும் போது ஆயத்தமே மங்கிடாதே என் விளக்குகள் ஜீவ சுடர் ஒளியாய் ஜொலிப்பேன் தேவ பிதா தங்கும் மாளிகையில் 2. சுபதின வெண்வஸ்திரம் ஆயத்தமே சீருடனே நான் துதித்திடுவேன் ஆட்டுக்குட்டியானவர் விருந்தில் அன்பரோடே நானும் வீற்றிருப்பேன் 3. சுவிசேஷ பாதரட்சை ஆயத்தமே சேவையிலே நான் அணிந்திடுவேன் இயேசுவின் நாள் வேகம் நெருங்கிடுதே இந்த நற்செய்தி சாற்றிடுவேன் 4. பாடுபட்டு மரிக்கவும் ஆயத்தமே பாரினிலே என் இயேசுவுக்காக பற்பல துன்பங்கள் சகித்திடுவேன் பேரின்ப ராஜ்யம் சேர்ந்திடுவேன் 5. எக்காளங்கள் தொனித்திட ஆயத்தமே என் அரும் இயேசு வருகிறார் ஆமென் என் இயேசுவே வாரும் என்றேன் ஆவலுடன் எதிர்பார்ப்பேன் 6. பரலோகம் செல்ல நானும் ஆயத்தமே பொன் நகரம் நான் சுதந்தரிப்பான் அல்லேலூயா பாடி பறந்திடுவேன் ஆண்டவர் அழைத்திடும் நாளிலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Aayatthamaanaen Aandavarai Santhikka Nitthiya Makizhchsi Ataivaen Matthiya Aakaaya Meethilae Mannan Yesuvaik Kaanuvaen 1. Manavaalan Thattum Pothu Aayatthamae Mangkitaathae En Vilakkugal Jeeva Sudar Oliyaay Jolippaen Thaeva Pithaa Thangkum Maalikaiyil 2. Subathina Venvasthiram Aayatthamae Seerudanae Naan Thuthitthituvaen Aattukkuttiyaanavar Virunthil Anbarotae Naanum Veerriruppaen 3. Suvisaesha Paadharatsai Aayatthamae Saevaiyilae Naan Aninthituvaen Yesuvin Naal Vaegam Nerungkituthae Indha Narseythi Saarrituvaen 4. Paatubattu Marikkavum Aayatthamae Paarinilae En Yesuvukkaaga Parpala Thunbanggal Sakitthituvaen Paerinba Raajyam Saernthituvaen 5. Ekkaalanggal Thonitthida Aayatthamae En Arum Yesu Varukiraar Aamen En Yesuvae Vaarum Enraen Aavaludan Ethirpaarppaen 6. Paralogam Sella Naanum Aayatthamae Pon Nakaram Naan Sudhandharippaan Allaelooyaa Paati Paranthituvaen Aandavar Azhaitthitum Naalilae