பாடல் #31814
புதிய வானம் தோன்றுதே
🔤 Puthiya Vaanam Thonruthae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புதிய வானம் தோன்றுதே புதிய பூமியும் காணுதே பழைய யாவும் ஒழியுதே புதிதாய் யாவும் மாறுதே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 1. நீதி எங்கும் நிறைந்திருக்கும் நீதி மான்கள் கொடி பறக்கும் புது மனை புகு பாக்கியம் புது சிருஷ்டியின் சிலாக்கியம் 2. அழுகை அலறல் அங்கு இல்லை ஆனந்தக் கடல் பொங்கி பொங்குதே என்னை அன்புடன் ஆற்றித் தேற்றுவார் ஆர்ப்பரித்து எழுந்தா டிடுவோம் 3. மண்ணின் மாந்தரும் விண்ணின் வேந்தர் பின்னி பிணைவதென்னே மகிமை வெற்றி வாகை சூடும் வீரர் நாம் பெற்றுக் கொண்டாடுவோம் சுதந்திரம் 4. தாகம் தணிக்கும் ஜீவநதி ரோகம் தவிர்க்கும் ஜீவ விருட்சம் பாவத் தடமும் அங்கு இல்லை தூய தேவன் ஒளி வீசிடுவார் 5. ஆசாரியர் அணிவகுப்போம் அங்குள்ள அரியணை அமர்வோம் பூலோக நினைவுகள் மறப்போம் மேலோக சூழலில் திளைப்போம் 6. முத்து மாளிகை சுத்தப் பொன்மயம் இரத்தின பளிங்கொளி வச்சிரம் வேகம் நுழைவோம் புது நகரம் மேகம் வர துடித்து நிற்கிறோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puthiya Vaanam Thonruthae Puthiya Poomiyum Kaanuthae Pazhaiya Yaavum Ozhiyuthae Puthithaay Yaavum Maaruthae Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa 1. Neethi Engkum Nirainthirukkum Neethi Maankal Koti Parakkum Puthu Manai Puku Paakkiyam Puthu Sirushtiyin Silaakkiyam 2. Azhukai Alaral Angku Illai Aanandhak Katal Pongki Pongkuthae Ennai Anpudan Aarrith Thaerruvaar Aarpparitthu Ezhunthaa Tituvom 3. Mannin Maandharum Vinnin Vaendhar Pinni Pinaivathennae Makimai Verri Vaakai Sootum Veerar Naam Perruk Kontaatuvom Sudhanthiram 4. Thaagam Thanikkum Jeevanathi Rogam Thavirkkum Jeeva Virutsam Paavath Thatamum Angku Illai Thooya Devan Oli Veesituvaar 5. Aasaariyar Anivakuppom Angkulla Ariyanai Amarvom Poologa Ninaivugal Marappom Maeloga Soozhalil Thilaippom 6. Mutthu Maalikai Sutthap Ponmayam Ratthina Palingkoli Vachsiram Vaegam Nuzhaivom Puthu Nakaram Maegam Vara Thutitthu Nirkirom