பாடல் #31810
நான் செல்லும் பாதையென்
🔤 Naan Sellum Paathaiyen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் செல்லும் பாதையென் நேசர் அறிவாரே நாசம் அணுகாமல் காப்பாரே 1. மரண பள்ளத்தாக்கில் - நான் வரும் எத்தீமைக்கும் அஞ்சேன் கருத்தாய்க் காத்திட வாக்கு தவறு வல்ல ஓர் தேவன் உண்டெனக்கு 2. கண்ணீரின் பள்ளத்தாக்கில் இது. தண்ணீரில்லா பாலையன்றோ கண்ணீரை மாற்றி சந்தோஷம் பொங்கிடும் தண்ணீர் தடாகம் மாற்றுவார் 3. பாடுகள் சகித்த இயேசு - அவர் நடந்த பாதை இதல்லோ ஓடியே வீரனாம் இயேசுவை நோக்கி பாடுவேன் நம்பிக்கையுடன் 4. மண் வாழ்வின் இன்பம் வெறுத்தேன் - மேல் விண் வாழ்வின் இன்பத்தை கண்டேன் துன்பங்கள் மூலம் சுத்தரானோருடன் பொன் நகரம் சேர்ந்து வாழுவேன் 5. ஆதரவாய் இடை கட்டி என்னை ஆனந்தமா யோட செய்தார் ஆவி அச்சாரத்தால் புத்திர சுவீகாரம் ஆளுகையும் அன்று பெறுவேன் 6. மங்கள கீதம் முழங்க - சபை எங்கும் துதிகளைச் சாற்ற எங்களின் மன்னவன் மங்கிடா நீதியின் செங்கோலும் ஓங்குமே நித்தியமாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Sellum Paathaiyen Naesar Arivaarae Naasam Anukaamal Kaappaarae 1. Marana Pallatthaakkil - Naan Varum Ettheemaikkum Anjsaen Karutthaayk Kaatthida Vaakku Thavaru Valla Or Devan Untenakku 2. Kanneerin Pallatthaakkil Ithu. Thanneerillaa Paalaiyanro Kanneerai Maarri Santhosham Pongkitum Thanneer Thataagam Maarruvaar 3. Paatugal Sakittha Yesu - Avar Natandha Paathai Idhallo Otiyae Veeranaam Yesuvai Nokki Paatuvaen Nampikkaiyudan 4. Man Vaazhvin Inbam Verutthaen - Mael Vin Vaazhvin Inbatthai Kantaen Thunbanggal Moolam Suttharaanorudan Pon Nakaram Saernthu Vaazhuvaen 5. Aadharavaay Itai Katti Ennai Aanandhamaa Yoda Seythaar Aavi Achsaaratthaal Putthira Suveekaaram Aalukaiyum Anru Peruvaen 6. Manggala Keedham Muzhangga - Sapai Engkum Thuthigalaich Saartra Enggalin Mannavan Mangkitaa Neethiyin Sengkolum Ongkumae Nitthiyamaay