பாடல் #31809
கர்த்தர் ஏசு வருவார் நித்தம்
🔤 Kartthar Aesu Varuvaar Nittham
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் ஏசு வருவார் - நித்தம் காத்து தவிக்கும் தேவ புத்திரர் களிப்பாய் வானத்தில் சேர்ந்திடவே 1. மேகத்தில் தோன்றும் மின்னொளியில் மகிமைக் கிறிஸ்து வெளிப்படுவார் தூதர் தொனி ஆரவாரத்துடன் தேவ எக்காளம் முழங்கிடவே 2. ஆண்டவர் அழைத்த முதல் பலன்கள் அமரர் வடிவாய் மாறிடுவோம் கர்த்தருக்குள் மரித்தார் எழும்ப பக்தர்களோடு பறந்திடுவேன் 3. தம் மணவாட்டி ஆயத்தம் துதியே செலுத்தி மகிழ்ந்திடவே நீதி விளங்கும் நல் வெண்வஸ்திரம் ஜோதி இலங்கத் தரித்திடுவாள் 4. நூதன சாலேமில் வந்திறங்கும் நடு வான மீதில் அலங்கரிப்பேன் ஆட்டுக்குட்டியானவர் விருந்தே அன்று சந்தோஷம் சுப மங்களம் 5. வெண் குதிரை மேல் ஏறி வந்தே கண்கள் நெருப்பாய் மிக ஜொலித்த உண்மையும் சத்தியமும் நிறைந்த விண்மணவாளன் ஜெயமெடுப்பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Aesu Varuvaar - Nittham Kaatthu Thavikkum Thaeva Putthirar Kalippaay Vaanatthil Saernthidavae 1. Maegatthil Thonrum Minnoliyil Makimaik Kiristhu Velippatuvaar Thoodhar Thoni Aaravaaratthudan Thaeva Ekkaalam Muzhangkidavae 2. Aandavar Azhaittha Mudhal Palankal Amarar Vativaay Maarituvom Karttharukkul Maritthaar Ezhumba Paktharkalotu Paranthituvaen 3. Tham Manavaatti Aayattham Thuthiyae Selutthi Makizhnthidavae Neethi Vilangkum Nal Venvasthiram Jothi Ilanggath Tharitthituvaal 4. Noodhana Saalaemil Vanthirangkum Natu Vaana Meethil Alanggarippaen Aattukkuttiyaanavar Virunthae Anru Santhosham Suba Manggalam 5. Ven Kuthirai Mael Aeri Vanthae Kankal Neruppaay Miga Jolittha Unmaiyum Satthiyamum Niraindha Vinmanavaalan Jeyametuppaar