பாடல் #31800
தேவ ஜனமே உன்னை காக்கிறார்
🔤 Thaeva Janamae Unnai Kaakkiraar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ ஜனமே உன்னை காக்கிறார் தேவ நீதி உன்னை காண்கிறார் இப்போதும் எப்போதும் கீதம் பாடுவோம் எக்காலம் மாறாதவர் நமது சொந்தம் 1. தலைமுறை தலைமுறையாய் நீர் அடைக்கலமானவரா துணையில்லா மனிதனுக்கு நல்ல மறைவான கேடகமே மனதின் பாரம் சுமைகளை தாங்கும் மாறாத தேவனை போற்றிடுவோம் 2. தினம் உந்தன் கிருபையினால் எந்தன் மனதை மகிழச் செய்தீர் லீபனோனின் கேதுரு போல் எந்தன் வாழ்க்கையில் செழிக்கச் செய்தீர் உணரும் இதயம் என்றும் தாரும் உயர்த்தி உம்மை என்றும் பாடிடுவேன் 3. தேவனின் பரிசுத்தம் உந்தன் ஆலய அலங்காரம் துதித்திடும் கீதங்களே தினம் எழும்பிடும் தீபங்களே பனியை போல கிருபை இறங்கும் மகிழ்ந்து பணிந்து துதித்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Janamae Unnai Kaakkiraar Thaeva Neethi Unnai Kaankiraar Ippothum Eppothum Keedham Paatuvom Ekkaalam Maaraadhavar Namathu Sondham 1. Thalaimurai Thalaimuraiyaay Neer Ataikkalamaanavaraa Thunaiyillaa Manidhanukku Nalla Maraivaana Kaedakamae Manathin Paaram Sumaigalai Thaangkum Maaraadha Devanai Porrituvom 2. Thinam Undhan Kirupaiyinaal Endhan Manathai Makizhach Seytheer Leebanonin Kaethuru Pol Endhan Vaazhkkaiyil Sezhikkach Seytheer Unarum Idhayam Enrum Thaarum Uyartthi Ummai Enrum Paatituvaen 3. Devanin Parisuttham Undhan Aalaya Alangkaaram Thuthitthitum Keedhanggalae Thinam Ezhumpitum Theebanggalae Paniyai Pola Kirupai Irangkum Makizhnthu Paninthu Thuthitthituvom