பாடல் #318
ஆ இன்ப சபையே
🔤 Aa Inba Sapaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஆ இன்ப சபையே! நீ என்றும் தழைத்து வாழ்க; அன்புடன் பாலர் யாவரும் அங்கு ஐக்கியமாய் ஓங்க; அன்னை தந்தை ஆவலாய் பாலகரை ஆண்டவன் பாதம் படைக்க. 2. ஆ இன்ப சபையே! உன் செல்வம் சுகம் தழைக்க; உன் மக்கள் யாவரும் ஓர் வேலை உகந்து செய்ய; பக்தியுடன் பற்பல சேவை ஆற்றி, கர்த்தன் அருள் பெற்று ஓங்க. 3. ஆ இன்ப சபையே! நன்மை பெருகும் அந்நாளில் ஆண்டவர் நாமத்தை ஆர்வ நன்றியுடன் போற்று; துன்பம் துக்கம் துயரம் தொடர் நாளில் அன்றும் அவரைக் கொண்டாடு. 4. ஆ இன்ப சபையே! உன் உண்மை நண்பர் கிறிஸ்தேசு; அன்பர் அவர் பிரசன்னம் உன்னை என்றும் நடத்தும்; இவ்வாழ்வின்பின் உன் மக்களை அவரே விண்ணோடு சேர்த்துக் காப்பாரே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Aa Inba Sapaiyae! Nee Enrum Thazhaitthu Vaazhka; Anpudan Paalar Yaavarum Angku Aikkiyamaay Ongga; Annai Thanthai Aavalaay Paalakarai Aandavan Paadham Pataikka. 2. Aa Inba Sapaiyae! Un Selvam Sugam Thazhaikka; Un Makkal Yaavarum Or Vaelai Uganthu Seyya; Pakthiyudan Parpala Saevai Aarri, Kartthan Arul Perru Ongga. 3. Aa Inba Sapaiyae! Nanmai Perukum Annaalil Aandavar Naamatthai Aarva Nanriyudan Porru; Thunbam Thukkam Thuyaram Thodar Naalil Anrum Avaraik Kontaatu. 4. Aa Inba Sapaiyae! Un Unmai Nanpar Kiristhaesu; Anbar Avar Pirasannam Unnai Enrum Natatthum; Ivvaazhvinpin Un Makkalai Avarae Vinnotu Saertthuk Kaappaarae.