பாடல் #31775
என்மேலுள்ள நின் சர்வ
🔤 Enmaelulla Nin Sarva
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. என்மேலுள்ள நின் சர்வ நன்மைகளுக்காக நான் என்ன செய்வேன் உனக்கேன் இயேசுபரா? - இப்போ 2. நன்றியால் எந்தன் உள்ளம் பொங்கி வழியுதே இன்று வரையும் என்னைக் காத்த தாலே-தேவா! 3.பாவத்தினின்று எந்தன் ஆவி உயிர்ப்பிக்க சாப் சிட்சை சகித்த தேவ சுதா மகா 4. என்ன அனுதினம் அன்போடு நடத்திடும் பொன் இயேசுவே! அனந்தம் ஸ்தோத்திரம் - எந்தன் 5. முற்றுமுடிய என்னைக் காத்து நடத்திடச் சத்துவம் ஈந்திடும் நல் நண்பன் நீரே-திருச் 6.தாதன் வலப்புறத்தில் நாதன் நீர் ஏழைக்காய் பாதம் வேண்டி நிற்கும் பாக்கியமே -பொன்னின் 7.குற்றம் குறைகள் இன்றிக் கோதில்லா ஜோதியில் முற்றும் என்னை நிறுத்த வல்லவர் -தேவா! 8. இந்த நிலம் தன்னில் ஏழை தங்கிடும் நாள் எல்லாம் ஏத்துவேனே உம் திரு நாமமதை - ஏழை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Enmaelulla Nin Sarva Nanmaigalukkaaga Naan Enna Seyvaen Unakkaen Yesubaraa? - Ippo 2. Nanriyaal Endhan Ullam Pongki Vazhiyuthae Inru Varaiyum Ennaik Kaattha Thaalae-thaevaa! 3.paavatthininru Endhan Aavi Uyirppikka Saap Sitsai Sakittha Thaeva Suthaa Makaa 4. Enna Anuthinam Anpotu Natatthitum Pon Yesuvae! Anandham Sthotthiram - Endhan 5. Murrumutiya Ennaik Kaatthu Natatthidach Satthuvam Eenthitum Nal Nanpan Neerae-thiruch 6.thaadhan Valappuratthil Naadhan Neer Aezhaikkaay Paadham Vaenti Nirkum Paakkiyamae -ponnin 7.kurtram Kuraigal Inrik Kothillaa Jothiyil Murrum Ennai Niruttha Vallavar -thaevaa! 8. Indha Nilam Thannil Aezhai Thangkitum Naal Ellaam Aetthuvaenae Um Thiru Naamamathai - Aezhai