பாடல் #31764
பரலோகில் உள்ள என் நாதா
🔤 Paralokil Ulla En Naathaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரலோகில் உள்ள என் நாதா பரலோகம் வந்தும்மைக் காண்பேன் அந்தநாள் வெகு சமீப - நானும் ஆண்டவர் இயேசுவை காண்பேன் அந்நிய கண்களால் - நாதா என் கண்ணால் கண்டிடுவேன் அந்நாள் என் வாழ்வின் பொன்நாள் என் வாழ்வின் பாக்கியநாள் என் காயத்திற்காய் நீர்பட்ட காயங்கள் கண்டும்மைத் துதிப்பேன் என் கண்ணீர் துடைக்கும் உன் கரத்தை தேவா பற்றியே போற்றிடுவேன் எனக்காய் நீர் ஆயத்தம் செய்து என் வீடு கண்டு உம்மைத் துதிப்பேன் சுத்தவான்களோடே சேர்ந்து பரிசுத்தரே உம்மை போற்றிடுவேன் என் சாயல் உம் சாயலாகும் அச்சாயல் கண்டு உம்மைத் துதிப்பேன் பளிங்குக் கடல் ஓரம் நின்று தேவா என்றென்றும் உம்மைப் போற்றி பரிசுத்தர் பரிசுத்தர் என்றே தூதரோடு சேர்ந்தே துதிப்பேன் என் பாக்கியம் நான் அங்கு கண்டு தேவே கண்ணீரோடும் போற்றிடுவேன் முள்கிரீடம் உம் சிரசில் ஏற்றீர் பொற்கிரீடம் என் சிரசில் சூட அக்கிரீடம் அங்கு நான் பெற்று தேவா நான் என்றும் போற்றிடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paralokil Ulla En Naathaa Paralogam Vanthummaik Kaanpaen Andhanaal Veku Sameeba - Naanum Aandavar Yesuvai Kaanpaen Anniya Kankalaal - Naathaa En Kannaal Kantituvaen Annaal En Vaazhvin Ponnaal En Vaazhvin Paakkiyanaal En Kaayatthirkaay Neerpatta Kaayanggal Kantummaith Thuthippaen En Kanneer Thutaikkum Un Karatthai Thaevaa Parriyae Porrituvaen Enakkaay Neer Aayattham Seythu En Veetu Kantu Ummaith Thuthippaen Sutthavaankalotae Saernthu Parisuttharae Ummai Porrituvaen En Saayal Um Saayalaakum Achsaayal Kantu Ummaith Thuthippaen Palingkuk Katal Oram Ninru Thaevaa Enrenrum Ummaip Porri Parisutthar Parisutthar Enrae Thoodharotu Saernthae Thuthippaen En Paakkiyam Naan Angku Kantu Thaevae Kanneerotum Porrituvaen Mulkireedam Um Sirasil Aerreer Porkireedam En Sirasil Sooda Akkireedam Angku Naan Perru Thaevaa Naan Enrum Porrituvaen