பாடல் #31746
கர்த்தரையே நம்பிடும் தேவ ஜனமே
🔤 Karttharaiyae Nampitum Thaeva Janamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரையே நம்பிடும் தேவ ஜனமே கலங்காதே ஒருபோதும் வெட்கப்படுவதில்லை 1. செங்கடல் கோரமாய் முன்னே நிற்கும் சேனைகள் பின்னால் தொடர்ந்து வரும் ஆனாலும் முன்னேறி போ என்கிறாரே அவரே ஓர் வழி திறந்திடுவாரே 2. கானானின் குடிகள் கொடியவரே கானக பாதை கடினமாமே கடந்து போய் நாம் அதை சுதந்தரிப்போம் கர்த்தர் நமக்காய் யுத்தம் செய்வார் 3. பாகால் சீடர்கள் சவால் விட்டு பதிலளியா தேவனை வேண்டுகிறார் எலியாவின் தேவன் இறங்கி வந்தாரே எரி நெருப்பால் இன்று பதிலளிப்பாரே 4. உனக்கெதிராக ஆக்கிடு மாயுதம் ஒருக்காலும் வாய்க்காமல் மறைந்திடுமே உன் மேல் ஓர் யுத்தம் எழுப்பினாலும் உன்னை இரட்சிக்கும் தேவன் உண்டு 5. யாக்கோபின் கூட்டமே பயப்படாதே ஈசாக்கின் தேவன் உன் துணையே அன்னை தன் சேவை மறந்தாலுமே ஆண்டவர் இயேசு அரவணைப்பாரே 6. சீயோனே உன் பாடுகளெல்லாம் சில காலம் என்று நினைத்தே பாடு சீக்கிரம் வருவார் சேர்த்திட உன்னை பாக்கியமடைவாய் பரலோக வாழ்வில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharaiyae Nampitum Thaeva Janamae Kalangkaathae Orupothum Vetkappatuvathillai 1. Senggatal Koramaay Munnae Nirkum Saenaigal Pinnaal Thodarnthu Varum Aanaalum Munnaeri Po Enkiraarae Avarae Or Vazhi Thiranthituvaarae 2. Kaanaanin Kutigal Kotiyavarae Kaanaka Paathai Katinamaamae Katanthu Poy Naam Athai Sudhandharippom Kartthar Namakkaay Yuttham Seyvaar 3. Paakaal Seedarkal Savaal Vittu Pathilaliyaa Devanai Vaentukiraar Eliyaavin Devan Irangki Vanthaarae Eri Neruppaal Inru Pathilalippaarae 4. Unakkethiraaga Aakkitu Maayudham Orukkaalum Vaaykkaamal Marainthitumae Un Mael Or Yuttham Ezhuppinaalum Unnai Iratsikkum Devan Untu 5. Yaakkopin Koottamae Payappataathae Eesaakkin Devan Un Thunaiyae Annai Than Saevai Maranthaalumae Aandavar Yesu Aravanaippaarae 6. Seeyonae Un Paatugalellaam Sila Kaalam Enru Ninaitthae Paatu Seekkiram Varuvaar Saertthida Unnai Paakkiyamataivaay Paraloga Vaazhvil