பாடல் #3172
பணிந்து நடந்து
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
பணிந்து நடந்து கொண்டாரே__பரன் பாலனும் கனிந்து தாய் தந்தையருக்கு அணிந்து தேவ தயவைப் பணிந்த மனதினோடு அவர்க்கு தணிந்தி எதிர்முனைந்து சொல்லாதபடி 1.தந்தை தாய் தனை மதித்து__அவருடைய தயவின் சித்தத்துக் கமைந்த மைந்தர்கள் உலகினில் வாழ்ந்து இருப்பாரென்று சிந்தை மகிழ்ந்து பரன் செப்பிய மொழிப்பாடி, 2.தந்தைக் குகந்த வேலையில் __ அவருடனே விந்தை யுடனே பயின்றார்; நிந்தை யிதுவென்றெண்ணிச் சிந்தைக் கலங்கிடாமல் எந்த விதமும் நரர் தன்னைப் பின்பற்றியேகப் 3.ஆவி பலமடைந்தார்; உலக தேவ அறிவிலும் நிறைவு கொண்டார்; தேவ கிருபையிலும் திருமறை முறையிலும் பூவில் அவர்க்கு நிகர் புனித ரில்லாதபடி, 4.பாவம் ஒன்று தவிர நம்மைப் போலப் பாடுள்ளவராய் நின்றாரே; நாவின் வாக்கினிலே இருந்தாரே புனிதமாய்; பாவி அவரைக் கண்டு பயிலுவது நன்று