பாடல் #317
ஆ இன்ப கால மல்லோ
🔤 Aa Inba Kaala Mallo
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆ! இன்ப கால மல்லோ - ஜெபவேளை ஆனந்த காலமல்லோ? பூவின் கவலைகள் போக்கி என் ஆசையைப் பொன்னுல காதிபன் முன்னே கொண்டேகிடும். - ஆ! 1. துன்பம் துயர் நீக்கி, - பொல்லாங்கன் - சோதனைகள் போக்கி, அம்பர வாசிகளோ - டிதயத்தை - இன்ப உறவாக்கி கெம்பீரமாகவே தம்பிரான் ஆசனம் கிட்டி மகிழ்வுடனுற்று வரச் செய்யும். - ஆ! 2. ஜீவ ஆறுதல் பெற்று, - பிஸ்காவின் - சிகரமதனில் உற்று, தேவ நகர் கண்ணுற்றுச் - சடலத்தை - ஜெகத்தில் எறிந்துவிட்டு, ஆவி களிப்புடன் ஆகாயஞ் செல்லவே, அன்போடு பார்த்து நல் வந்தனஞ் சொல்லுவேன் - ஆ!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aa! Inba Kaala Mallo - Jebavaelai Aanandha Kaalamallo? Poovin Kavalaigal Pokki En Aasaiyaip Ponnula Kaathiban Munnae Kontaekitum. - Aa! 1. Thunbam Thuyar Neekki, - Pollaanggan - Sodhanaigal Pokki, Ambara Vaasigalo - Tidhayatthai - Inba Uravaakki Kempeeramaagavae Thampiraan Aasanam Kitti Makizhvudanurru Varach Seyyum. - Aa! 2. Jeeva Aarudhal Perru, - Piskaavin - Sigaramathanil Urru, Thaeva Nakar Kannurruch - Satalatthai - Jegatthil Erinthuvittu, Aavi Kalippudan Aakaayanj Sellavae, Anpotu Paartthu Nal Vandhananj Solluvaen - Aa!