பாடல் #3166
இயேசு நாதா வாரும்
🔤 Yesu Naathaa Vaarum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு நாதா வாரும் தேவா ஏழை எந்தன் சங்கடங்கள் - 2 இன்பமுடன் கேளும் தேவா இன்னல் யாவும் தீரும் தேவா - 2 கல்வாரியில் தொங்கும் போது கர்த்தரே நீர் என்னைக் கண்டு - 2 கை கால்களின் காயம் காட்டி என்னை அழைத்தீரே தேவா - 2 தேவா உந்தன் காயங்களை பார்க்கச் சிலுவையருகில் - 2 வந்தேன் தேவா இந்தப்பாடு எந்தனுக்காய்ப் பட்டரே நீர் - 2 முட்கிரீடம் உமக்கு மூங்கில்தடி செங்கோவாச்சோ - 2 மோக வழி காட்ட வந்த மோக சியோன் மன்னவரே - 2 ஆவி பிரியும் வரையும் தேவா உந்தன் பக்கம் நின்று - 2 ஆறுதல் மொழிகள் சொல்ல ஆருமில்லையோ உமக்கு - 2 பன்னிரு சீஷர்களுண்டு பாவம் தீர்ந்த பேர்களுண்டு - 2 மன்னராக்க எண்ணம் கொண்ட மானிடரும் எங்கே போனார் - 2 பாழுலகின் பாவமெல்லாம் பாக்கியனே நீர் தொலைத்து - 2 தீர்ந்ததென்றோ தேவா உம்மை சினேகிதரும் கைவிட்டனர் - 2 பாவி என்னைத் தேடி வந்து பாவமெல்லாம் மன்னித்த என் - 2 இயேசு நாதா என்னை ஜீவ பலியாக ஏற்றுக் கொள்வீர் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Naathaa Vaarum Thaevaa Aezhai Endhan Sanggatanggal - 2 Inbamudan Kaelum Thaevaa Innal Yaavum Theerum Thaevaa - 2 Kalvaariyil Thongkum Pothu Karttharae Neer Ennaik Kantu - 2 Kai Kaalkalin Kaayam Kaatti Ennai Azhaittheerae Thaevaa - 2 Thaevaa Undhan Kaayanggalai Paarkkach Siluvaiyarukil - 2 Vanthaen Thaevaa Indhappaatu Endhanukkaayp Pattarae Neer - 2 Mutkireedam Umakku Moongkilthati Sengkovaachso - 2 Moga Vazhi Kaatta Vandha Moga Siyon Mannavarae - 2 Aavi Piriyum Varaiyum Thaevaa Undhan Pakkam Ninru - 2 Aarudhal Mozhigal Solla Aarumillaiyo Umakku - 2 Panniru Seesharkaluntu Paavam Theerndha Paerkaluntu - 2 Mannaraakka Ennam Konda Maanidarum Engkae Ponaar - 2 Paazhulakin Paavamellaam Paakkiyanae Neer Tholaitthu - 2 Theerndhathenro Thaevaa Ummai Sinaekidharum Kaivittanar - 2 Paavi Ennaith Thaeti Vanthu Paavamellaam Mannittha En - 2 Yesu Naathaa Ennai Jeeva Paliyaaga Aerruk Kolveer - 2