பாடல் #3165
பக்தியாய்ச் செபம்
🔤 Pakthiyaaych Sebam
🎙 Bro. ஹென்றி ஆல்ஃப்ரெட் கிருஷ்ணபிள்ளை • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1.பக்தியாய்ச் செபம் பண்ணவே சுத்தமாய்த் தெரியாதய்யா! புத்தியோடும்மைப் போற்ற, நல் சித்தம் ஈந்திடும், யேசுவே! 2.பாவ பாதையைவிட்டு நான் ஜீவ பாதையில் சேர, நல் ஆவி தந்தெனை ஆட்கொளும், தேவ தேவ குமாரனே! 3.பொய்யும் வஞ்சமும் போக்கியே மெய்யும் அன்பும் விடாமல், யான் தெய்வமே, உனைச் சேவித்திங் குய்யும் நல்வரம் உதவுவாய். 4.அப்பனே! உன தன்பினுக் கெப்படிப் பதில் ஈட்டுவேன்? செப்பும் என்னிதயத்தையே ஒப்படைத்தனன் உன்னதே. 5.சிறுவன் நானுனைச் செவ்வையாம் அறியவும், முழு அன்பினால் நிறையுமுள்ள நிலைக்கவும் இறைவனே! வரம் ஈகுவாய். 6.அண்ணலே! உன தாலயம் நண்ணி, நல்லுணர்வோடுனை எண்ணி யெண்ணி இறைஞ்ச, உன் கண்ணில் இன்னருள் காட்டுவாய்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1.pakthiyaaych Sebam Pannavae Sutthamaayth Theriyaadhayyaa! Putthiyotummaip Portra, Nal Sittham Eenthitum, Yaesuvae! 2.paava Paathaiyaivittu Naan Jeeva Paathaiyil Saera, Nal Aavi Thanthenai Aatkolum, Thaeva Thaeva Kumaaranae! 3.poyyum Vanjjamum Pokkiyae Meyyum Anpum Vitaamal, Yaan Theyvamae, Unaich Saevitthing Kuyyum Nalvaram Udhavuvaay. 4.appanae! Una Thanpinuk Keppatip Pathil Eettuvaen? Seppum Ennidhayatthaiyae Oppataitthanan Unnathae. 5.siruvan Naanunaich Sevvaiyaam Ariyavum, Muzhu Anpinaal Niraiyumulla Nilaikkavum Iraivanae! Varam Eekuvaay. 6.annalae! Una Thaalayam Nanni, Nallunarvotunai Enni Yenni Irainjja, Un Kannil Innarul Kaattuvaay.