பாடல் #31587
நித்திய சர்வ அருள் நிறைவே
🔤 Nitthiya Sarva Arul Niraivae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. நித்திய சர்வ அருள் நிறைவே! உம்மை வைத்தியம் தெ. நின் திருநாமத்தின் நல் அருளை ஊற்றிடும் இங்கு ஊக்கமுடன்: சத்திய தேவனே! --புத்திரர் அவர்கட்கு அன்புடன் இப்போ இன்ப சமூகம் தந்தை மகிழ்ச்சி பொங்கிட செய்யும் உந்தன் பிரசன்னத்தால் 2. கானா ஊரின் கல்யாணத்தில் தினமதில் கூடினார் மத்தியிலே அற்புதமாக அவர் குறைவை முற்றும் தீர்த்த நற்பரனே இப்போதும் உன் நிறைவை-ஈந்திடும் அன்புடன்: அற்புத நாதா பொற் கரம் நீட்டும் கற்புடன் வாழ நற் பரனே! உம் அற்புதக் கிருபையால் 3. ஆதாம் தனியாய் இருப்பதுவே நலம் அல்லதான் என்றிந்து தக்க துணையளித்தன்புடனே ஆசீர்வதித்த அருள்மயமே! இன்றும் மணாளர் மேல்-ஆசீர் பொழிந்திடுமே உன்னத நாமம் எங்கும் ஒங்க வன்மையாய் என்றும் உம்மில் நிலைத்து உம் பணி செய்யவே, 4. மணவாளன் இயேசுவின் மணவாட்டி யாம் சபை என்ற மா இரகசியம் இத்தினம் யாவர்க்கும் கற்பியுமே, சத்திய வேதம் மெய்ப் பொருளே பத்திரமாக இப்பெரும் சத்தியத்தைச் சித்தத்தில் வைத்துப் பார்த்தல் உம்மை இத்தரை யோர்க்கு நித்தியம் சாற்ற சக்தியை ஈகுவாய். 5. மகிமை தேவனே! மங்கள ரூபிணி! மா மறைவானே. மணவாளன் இயேசு வருகைக்காக மணவாட்டியாகித் தூயருடன் மண மக்கள் இவர்களும் மா பரிசுத்தமாக ஆவிக்குள் வாழ்ந்து ஆயத்தமாக-நேயமாய்க் காத்து தூய்மை அளித்துத் தூய போலாக்குவாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Nitthiya Sarva Arul Niraivae! Ummai Vaitthiyam The. Nin Thirunaamatthin Nal Arulai Oorritum Ingku Ookkamudan: Satthiya Devanae! --putthirar Avarkatku Anpudan Ippo Inba Samoogam Thanthai Makizhchsi Pongkida Seyyum Undhan Pirasannatthaal 2. Kaanaa Oorin Kalyaanatthil Thinamathil Kootinaar Matthiyilae Arpudhamaaga Avar Kuraivai Murrum Theerttha Narparanae Ippothum Un Niraivai-eenthitum Anpudan: Arpudha Naathaa Por Karam Neettum Karpudan Vaazha Nar Paranae! Um Arpudhak Kirupaiyaal 3. Aathaam Thaniyaay Iruppathuvae Nalam Allathaan Enrinthu Thakka Thunaiyalitthanpudanae Aaseervathittha Arulmayamae! Inrum Manaalar Mael-aaseer Pozhinthitumae Unnatha Naamam Engkum Ongga Vanmaiyaay Enrum Ummil Nilaitthu Um Pani Seyyavae, 4. Manavaalan Yesuvin Manavaatti Yaam Sapai Endra Maa Irakasiyam Itthinam Yaavarkkum Karpiyumae, Satthiya Vaedham Meyp Porulae Patthiramaaga Ipperum Satthiyatthaich Sitthatthil Vaitthup Paartthal Ummai Ittharai Yorkku Nitthiyam Saartra Sakthiyai Eekuvaay. 5. Makimai Devanae! Manggala Roopini! Maa Maraivaanae. Manavaalan Yesu Varukaikkaaga Manavaattiyaakith Thooyarudan Mana Makkal Ivarkalum Maa Parisutthamaaga Aavikkul Vaazhnthu Aayatthamaaga-naeyamaayk Kaatthu Thooymai Alitthuth Thooya Polaakkuvaay