பாடல் #31570
காலமும் குறுகுதே
🔤 Kaalamum Kurukuthae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. காலமும் குறுகுதே உலகமும் கலங்குதே முடிவு நாள் நெருங்கும் இயேசுவும் சமீபமே. மகிமையில் நம் இயேசுவை தரிசிக்கும் அந்நாள் அல்லோ , நாளில் நாள் நல்ல நாள், பாக்கிய நாள் அந்த நாள், இன்ப நாள், பாக்கிய நாள்! 2. காண்பதெல்லாம் மாயையே மாம்சம் எல்லாம் புல்லாமே மானிடரின் மகிமைகள் மாண்டுபோம் புல் பூவைப் போல, 3. கருணையாய் அழைக்கிறார் கிருபையை நீ போகாதே மரண நேரம் வருகையில் தருணம் எல்லாம் போய்விடும் 4. காலத்தை வீண் போகாது காயத்தை நீ நம்பாதே வாலிபமும் மாயையே வாழ்நாளும் பறக்குதே. 5. மாயை லோக நம்பாதே; மாந்தர் பாதை செல்லாதே , ஆத்துமாவை இரட்சிக்க கர்த்தரை நம்புவேன். 6. கர்த்தர் நம் இயேசுவின் வருகை நாளும் நெருங்காதே, தீவிரமாய் ஓடி வா, நாளை உன் நாள் அல்லவே. (இப்போதே சொல்) 7. இயேசுவே, இதோ என்னை முற்றிலும் படைக்கிறேன்; ஏற்றுக் கொள்ளும் பாசம் மகிமையில் நான் நிற்கவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kaalamum Kurukuthae Ulakamum Kalangkuthae Mutivu Naal Nerungkum Yesuvum Sameebamae. Makimaiyil Nam Yesuvai Tharisikkum Annaal Allo , Naalil Naal Nalla Naal, Paakkiya Naal Andha Naal, Inba Naal, Paakkiya Naal! 2. Kaanpathellaam Maayaiyae Maamsam Ellaam Pullaamae Maanidarin Makimaigal Maantupom Pul Poovaip Pola, 3. Karunaiyaay Azhaikkiraar Kirupaiyai Nee Pokaathae Marana Naeram Varukaiyil Tharunam Ellaam Poyvitum 4. Kaalatthai Veen Pokaathu Kaayatthai Nee Nampaathae Vaalibamum Maayaiyae Vaazhnaalum Parakkuthae. 5. Maayai Loga Nampaathae; Maandhar Paathai Sellaathae , Aatthumaavai Iratsikka Karttharai Nampuvaen. 6. Kartthar Nam Yesuvin Varukai Naalum Nerungkaathae, Theeviramaay Oti Vaa, Naalai Un Naal Allavae. (ippothae Sol) 7. Yesuvae, Itho Ennai Murrilum Pataikkiraen; Aerruk Kollum Paasam Makimaiyil Naan Nirkavae