பாடல் #31568
துதிப்பேன் நேசர் இயேசுவை
🔤 Thuthippaen Naesar Yesuvai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிப்பேன் நேசர் இயேசுவை துதிகள் செலுத்தியே கர்த்தரின் செயல்கள் இன்றென்றுமே எண்ணிலடங்காதோர் ஆச்சரியமே 1. பேரில் என் பாவம் யாவும் தீர்த்தார் பரத்தில் ஆவல் தீர்ப்பார் அகமது சந்தோஷம் ஈந்தார் அவர் நாமம் என்றும் போற்றிடுவேன் 2. பாவ சாபங்கள் ரோகங்களை நேயன் இயேசு சுமந்தார் ஆபத்தில் எந்தன் துணையானார் அவர் துதி என்றும் போற்றிடுவேன் 3. சத்துரு சேனை தாக்கும் நேரம் பத்திரமாகக் காத்தார் யுத்தம் எனக்காய் நடத்தினார் நித்தம் துதித்து பாடிடுவேன் 4. காரிருள் சூழ்ந்த வேளைகளில் கர்த்தர் என் ஒளியானார் கரம்பிடித்தே ஆதரித்தார் கருத்தாய் அவரைப் போற்றிடுவேன் 5. கைவேலையல்லா வீட்டினிலே கொண்டெமைச் சேர்த்திடுவார் ஆளுவோம் நேசர் இயேசுவோடே வாழ்ந்திடுவேன் அவரோடென்றுமாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthippaen Naesar Yesuvai Thuthigal Selutthiyae Karttharin Seyalkal Inrenrumae Ennilatangkaathor Aacchariyamae 1. Paeril En Paavam Yaavum Theertthaar Paratthil Aaval Theerppaar Agamathu Santhosham Eenthaar Avar Naamam Enrum Porrituvaen 2. Paava Saabanggal Roganggalai Naeyan Yesu Sumanthaar Aabatthil Endhan Thunaiyaanaar Avar Thuthi Enrum Porrituvaen 3. Satthuru Saenai Thaakkum Naeram Patthiramaagak Kaatthaar Yuttham Enakkaay Natatthinaar Nittham Thuthitthu Paatituvaen 4. Kaarirul Soozhndha Vaelaigalil Kartthar En Oliyaanaar Karampititthae Aadharitthaar Karutthaay Avaraip Porrituvaen 5. Kaivaelaiyallaa Veettinilae Kontemaich Saertthituvaar Aaluvom Naesar Yesuvotae Vaazhnthituvaen Avarotenrumaay