பாடல் #31566
சீயானே நீ விழித்தெழும்பிடுவா
🔤 Seeyaanae Nee Vizhitthezhumpituvaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீயானே! நீ விழித்தெழும்பிடுவாய் சாலேமின் ராஜா இதோ வருவதால் சீல குணமுள்ள அன்பின் தயாளன் ஆகாயம் மீதில் எழுந்திதோ வாரார்! 1. பூ மண்டலங்கள் கிடு கலங்கிடுதே வான மண்டலங்கள் நடுங்கிடுதே காலம் இனி இல்லை இயேசுவின் வருகை கிட்ட நெருங்கி சேருவதாலே. 2. கொலு மண்டபங்கள் திகில் அடைந்திடுதே. கொடிய செயல் களும் தோன்றிடுதே. உலகில் சமாதானம் ஒழிந்திடுதே பார், தேவ சமாதானம் பெற்றிடுவாய். 3. மாய உலகம் வெறுத்து விட்டால் நீ மாட்சி தங்கிய நகர் சேரலாமா மகிமையின் சாயல் அணிந்தவராய் நாம் மணவாளனோடு ஏகிடுவோமே, 4. பலவிதத் துன்பங்கள் நிறைந்துமே வருதே காரிருள் நாட்களும் நெருங்கிடுதே அந்தகாரப் பிரபு வெளியாகுமுன்னே, சந்தோஷ ராஜ்யத்தில் சேர்ந்திடலாம் நாம் 5. திருச்சபையே! உன் தீபங்கள் எல்லாம் சூரியப் பிரபையாய்த் திலங்கட்டுமே! மகிமையின் இரத்தத்துடன் உதித்திடும் போது மணவாளனுடன் நாம் மறுரூபமாவோம்!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seeyaanae! Nee Vizhitthezhumpituvaay Saalaemin Raajaa Itho Varuvathaal Seela Kunamulla Anpin Thayaalan Aakaayam Meethil Ezhunthitho Vaaraar! 1. Poo Mandalanggal Kitu Kalangkituthae Vaana Mandalanggal Natungkituthae Kaalam Ini Illai Yesuvin Varukai Kitta Nerungki Saeruvathaalae. 2. Kolu Mandapanggal Thikil Atainthituthae. Kotiya Seyal Kalum Thonrituthae. Ulakil Samaathaanam Ozhinthituthae Paar, Thaeva Samaathaanam Perrituvaay. 3. Maaya Ulakam Verutthu Vittaal Nee Maatsi Thangkiya Nakar Saeralaamaa Makimaiyin Saayal Anindhavaraay Naam Manavaalanotu Aekituvomae, 4. Palavidhath Thunbanggal Nirainthumae Varuthae Kaarirul Naatkalum Nerungkituthae Andhakaarap Pirapu Veliyaakumunnae, Santhosha Raajyatthil Saernthidalaam Naam 5. Thirucchapaiyae! Un Theebanggal Ellaam Sooriyap Pirapaiyaayth Thilanggattumae! Makimaiyin Ratthatthudan Uthitthitum Pothu Manavaalanudan Naam Maruroobamaavom!