பாடல் #31555
ஏழை எனக்காக எல்லாம் படித்த
🔤 Aezhai Enakkaaga Ellaam Patittha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஏழை எனக்காக எல்லாம் படித்த இயேசுவே, நேசத்தால் ஏற்றுக் கொண்டார்; என்னில் ஒரு நன்மையும் இல்லையே, ஏகனே! எல்லாம் உம் கிருபையே அலை போல் அருள், ஆழிபோல், - அன்பு அனுதினம் எனக்களிக்கிறீர்; அல்லேலூயா! அல்லேலூயா! அல்லும் பகலும் நாள் பாடிடுவேன். 2. சோதனையாலே சோரும் போது உள்ளம் சார்ந்திடுவேன் உந்தன் சாட்சிகளில் சாத்தானை ஜெயிக்க சத்தியத்துடன் சக்தியும் அளிப்பீரே, 3. களிமண் போல கர்த்தனே! உந்தன் கைகளில் என்னைக்கையளிக்கிறேன் கண்மணி போலவே காப்பீர் இக்கானிலே கலங்கிடுவேனோ நான்? 4. நீரே என் வாஞ்சை, நீரே என் தஞ்சம் நீரோடையில் அகம் தாகம் தீர்ப்பார் நீதி சமாதான சந்தோஷத்தால் உள்ளம் நிறைத்திடுவீர் ஐயா! 5. வந்திடும் இந் நம்பிக்கையிலே எந்தை! என் உள்ளம் துள்ளிடுதே, மந்தையின் மாபெரும் மேய்ப்பரை வால் சந்திப்பேன் ஆயத்தமாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Aezhai Enakkaaga Ellaam Patittha Yesuvae, Naesatthaal Aerruk Kontaar; Ennil Oru Nanmaiyum Illaiyae, Aeganae! Ellaam Um Kirupaiyae Alai Pol Arul, Aazhipol, - Anpu Anuthinam Enakkalikkireer; Allaelooyaa! Allaelooyaa! Allum Pakalum Naal Paatituvaen. 2. Sodhanaiyaalae Sorum Pothu Ullam Saarnthituvaen Undhan Saatsigalil Saatthaanai Jeyikka Satthiyatthudan Sakthiyum Alippeerae, 3. Kaliman Pola Kartthanae! Undhan Kaigalil Ennaikkaiyalikkiraen Kanmani Polavae Kaappeer Ikkaanilae Kalangkituvaeno Naan? 4. Neerae En Vaanjsai, Neerae En Thanjjam Neerotaiyil Agam Thaagam Theerppaar Neethi Samaathaana Santhoshatthaal Ullam Niraitthituveer Aiyaa! 5. Vanthitum In Nampikkaiyilae Enthai! En Ullam Thullituthae, Manthaiyin Maaperum Maeypparai Vaal Santhippaen Aayatthamaay