பாடல் #31551
கர்த்தரின் கிருபை என்றும் உள்ளதே
🔤 Karttharin Kirupai Enrum Ullathae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரின் கிருபை என்றும் உள்ளதே -அவர் கருணைக்கு எந்நாளும் கரை இல்லையே 1. அன்பின் அகலம் நீளம் உயரமும் ஆழமும் அறிந்திட ஆவியால் அளித்தாம் அடிமையின் நுகம் எந்தன் தோளினின்றெடுத்தே ஆனந்தத்தில் என்னைப் பாடச் செய்தார் 2. தாவீது கருவின் மாறாத கிருபையால் தாசன் எனக்களித்தார் இயேசுவுக்குள் தன் நித்திய நோக்கத்தில் தெரிந்தெடுத்தார் . தவறாது செய்ததை நிறைவேற்றுவார் . 3. கழுகு தான் கட்டின கூட்டினைக் கலைத்தே கனிவுடன் குஞ்சுகள் மீதசைவாடிக் காப்பது போல நிதம் காத்து என்னைத் தமது கண்களில் அவர் நடத்துவதாலே, 4. கால் மிதிக்கும் இடம் யாவையும் அளிப்பேன், காத்திடுவாள் என்று தான் என்றார் கன்மலை கிறிஸ்து என் பின் தொடர்வதால் கலங்காதே திடனுடன் பின் செல்வேனே. 5. அழைத்தவரே என் சீயோனில் சேர்க்க, அன்பினால் சீர்ப்படுத்தி ஸ்திரப்படுத்தி வழுவிடா வழிகளில் காப்பேன் என்றவரே பழுதில்லாமல் தம்முன் நிறுத்திடுவாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharin Kirupai Enrum Ullathae -avar Karunaikku Ennaalum Karai Illaiyae 1. Anpin Agalam Neelam Uyaramum Aazhamum Arinthida Aaviyaal Alitthaam Atimaiyin Nugam Endhan Tholininretutthae Aanandhatthil Ennaip Paadach Seythaar 2. Thaaveethu Karuvin Maaraadha Kirupaiyaal Thaasan Enakkalitthaar Yesuvukkul Than Nitthiya Nokkatthil Therinthetutthaar . Thavaraathu Seythathai Niraivaerruvaar . 3. Kazhuku Thaan Kattina Koottinaik Kalaitthae Kanivudan Kunjsugal Meedhasaivaatik Kaappathu Pola Nidham Kaatthu Ennaith Thamathu Kankalil Avar Natatthuvathaalae, 4. Kaal Mithikkum Idam Yaavaiyum Alippaen, Kaatthituvaal Enru Thaan Enraar Kanmalai Kiristhu En Pin Thodarvathaal Kalangkaathae Thidanudan Pin Selvaenae. 5. Azhaitthavarae En Seeyonil Saerkka, Anpinaal Seerppatutthi Sthirappatutthi Vazhuvitaa Vazhigalil Kaappaen Endravarae Pazhuthillaamal Thammun Nirutthituvaarae