பாடல் #31546
என் ஆவியில் மன பாரத்துடன்
🔤 En Aaviyil Mana Paaratthudan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஆவியில் மன பாரத்துடன் ஏசுவை நோக்கி ஜெபம் செய்கின்றேன் பரிசுத்த ஆவியானவரே பரம பிதாவின் சந்நிதியில் பெருமூச்சுடன் நமக்காக வேண்டுவார் 1. இயேசு கெத்சமனியில் மிக வியாகுலம் இரத்த வியர்வை கண்ணீருடன் ஜெபித்தார் அந்த ஜெபத்தின் பயன் எந்தன் மனம் மாறிற்றே ஐயோ அதமானேன் என்னை ஏசு மீட்டாரே 2. அவர் எனக்காக அழுது புலம்பினார் அன்பை என்னிடம் என் மனம் உடைந்திடுதே தேவ இரக்கம் எல்லோருக்கும் கிடைத்திடவே தேடி திருப்பாதம் கதறி மன்றாடுவேன் 3. அனுதினமும் என் சிலுவை சுமந்து நான் ஆண்டவரின் பின்னே ஜீவயாத்திரை செய்கிறேன் வழி ஜீவனுக்குள் என்னை சேர்த்திடு தே வாசல் இடுக்கமும் நெருக்கமும் ஆனதே 4. வீசும் புயல் போன்ற சோதனை ஓயவே வாழ்வெல்லாம் வாட்டும் துன்பங்களின் ஒழித்திடவே பாவ மன நோயை மன்னித்து குணமாக்க பாவி மனம் மாற அவர் பாதம் கெஞ்சுவேன் 5. ஈன குருசில் வடியும் இரத்த வெள்ளம் ஏசு நம்மை சுத்தம் செய்யும் பரிகாரம் அதைக் காலின் கீழ் மிதித்து மே நிந்திப்பவன் ஆக்கினை கென்றும் ஆள்கின்றான் ஐயோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Aaviyil Mana Paaratthudan Aesuvai Nokki Jebam Seykinraen Parisuttha Aaviyaanavarae Parama Pithaavin Sannithiyil Perumoochsudan Namakkaaga Vaentuvaar 1. Yesu Kethsamaniyil Miga Viyaakulam Rattha Viyarvai Kanneerudan Jepitthaar Andha Jebatthin Payan Endhan Manam Maarirrae Aiyo Adhamaanaen Ennai Aesu Meettaarae 2. Avar Enakkaaga Azhuthu Pulampinaar Anpai Ennidam En Manam Utainthituthae Thaeva Irakkam Ellorukkum Kitaitthidavae Thaeti Thiruppaadham Kathari Manraatuvaen 3. Anuthinamum En Siluvai Sumanthu Naan Aandavarin Pinnae Jeevayaatthirai Seykiraen Vazhi Jeevanukkul Ennai Saertthitu Thae Vaasal Itukkamum Nerukkamum Aanathae 4. Veesum Puyal Pondra Sodhanai Oyavae Vaazhvellaam Vaattum Thunbanggalin Ozhitthidavae Paava Mana Noyai Mannitthu Kunamaakka Paavi Manam Maara Avar Paadham Kenjsuvaen 5. Eena Kurusil Vatiyum Rattha Vellam Aesu Nammai Suttham Seyyum Parikaaram Athaik Kaalin Keezh Mithitthu Mae Ninthippavan Aakkinai Kenrum Aalkinraan Aiyo