பாடல் #31544
என்னை பரிசுத்த படுத்தும் தேவனே
🔤 Ennai Parisuttha Patutthum Devanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை பரிசுத்த படுத்தும் தேவனே உம் திருவடி பணிந்து கெஞ்சுகிறேன்! 1. மாமிச சிந்தை மரணமே: ஆவியின் சிந்தை யோ ஜீவன் தரும். மாமிச சிந்தனைகள் அகல வே ஆண்டவர் பெலன் தாருமே. 2. இதயத்தை வெண்மையாக மாற்றிடும் இறைவா! உம் இரத்தத்தால் கழுவிடும்; இதயத்தை உம் அன்பால் நிறைத்திடும், இயேசுவே வந்தாளுமே. 3. பாய்ந்திடும் உலகக் கண்ணிகளில் மயங்கிடா வண்ணம் நீர் காத்திடுமே; மாளா உம் கிருபையை பொழிந்திடும் மன்னவா! என்றென்றுமே. 4. நடைபாதை தவறும் நேரங்களில் நலமான வழிகளில் திருப்பிடும்; நல்லாலோசனை என்றும் தந்திடும் நாதனே நீர் நடத்தும். 5. கலக்கங்கள் நெருக்கங்கள் சூழ்கையில் கரம் பற்றியே என்னை அணைத்திடும் களிப்புடன் வருகையில் எதிர் நோக்கி கர்த்தாவே! கிருபை தாரும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Parisuttha Patutthum Devanae Um Thiruvati Paninthu Kenjsukiraen! 1. Maamisa Sinthai Maranamae: Aaviyin Sinthai Yo Jeevan Tharum. Maamisa Sindhanaigal Agala Vae Aandavar Pelan Thaarumae. 2. Idhayatthai Venmaiyaaga Maarritum Iraivaa! Um Ratthatthaal Kazhuvitum; Idhayatthai Um Anpaal Niraitthitum, Yesuvae Vanthaalumae. 3. Paaynthitum Ulakak Kannigalil Mayangkitaa Vannam Neer Kaatthitumae; Maalaa Um Kirupaiyai Pozhinthitum Mannavaa! Enrenrumae. 4. Nataipaathai Thavarum Naeranggalil Nalamaana Vazhigalil Thiruppitum; Nallaalosanai Enrum Thanthitum Naadhanae Neer Natatthum. 5. Kalakkanggal Nerukkanggal Soozhkaiyil Karam Parriyae Ennai Anaitthitum Kalippudan Varukaiyil Ethir Nokki Kartthaavae! Kirupai Thaarum.