பாடல் #31541
இயேசு உன் உள்ளத்தில் வாசம் செய்ய
🔤 Yesu Un Ullatthil Vaasam Seyya
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு உன் உள்ளத்தில் வாசம் செய்ய ஆசையாய் கேட்கிறாரே மெய் சமாதானமா இன்றளிப்பார் ஐங்காயம் கொண்டவரே 1. பாவத்தின் இன்பங்களும் - உலகில் மாயையின் காட்சிகளும் அழிவில் உன்னை அழித்திடும் வேளை தோழனே எங்கு செல்வாய்? 2. தம்மண்டை வந்திடுவார் - நிச்சயம் கண்டடைவான் இரட்சையே ஆக்கினையெல்லாம் ஏற்றவர் மீதில் போக்கிட மரித்தாரே 3. மரணம் என்றுன்னையே - சந்திக்கும் தருணம் என் செய்குவாய் அண்டிடுவாயே மாண்டிடும் முன்னே ஆண்டவர் இயேசுவை 4. ரோகத்தால் வாடுவதேன் - அதனை தேகத்தில் சுமந்தாரே ஜீவனின் ஊற்றாய் வீற்றிட உன்னில் இவ்வேளை ஏற்றுக்கொள்வாய் 5. மரித்தெதெழுந்தவரின் - சாயல் தரித்ததில் வளர பரிசுத்தமும் அவர் நிறைவும் உரிமையாம் உனக்கே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Un Ullatthil Vaasam Seyya Aasaiyaay Kaetkiraarae Mey Samaathaanamaa Indralippaar Aingkaayam Kondavarae 1. Paavatthin Inbanggalum - Ulakil Maayaiyin Kaatsigalum Azhivil Unnai Azhitthitum Vaelai Thozhanae Engku Selvaay? 2. Thammantai Vanthituvaar - Nicchayam Kandataivaan Iratsaiyae Aakkinaiyellaam Aertravar Meethil Pokkida Maritthaarae 3. Maranam Enrunnaiyae - Santhikkum Tharunam En Seykuvaay Antituvaayae Maantitum Munnae Aandavar Yesuvai 4. Rogatthaal Vaatuvathaen - Adhanai Thaegatthil Sumanthaarae Jeevanin Oorraay Veerrida Unnil Ivvaelai Aerrukkolvaay 5. Maritthethezhundhavarin - Saayal Tharitthathil Valara Parisutthamum Avar Niraivum Urimaiyaam Unakkae