பாடல் #31540
இயேசுவே என் ஆத்ம நேசர் இவர்
🔤 Yesuvae En Aathma Naesar Ivar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே என் ஆத்ம நேசர் இவர் பாசமாய் உன்னை அழைக்கிறார் ஓடி வந்திடுவாய் உன் துயர் துடைப்பார் நாடிடும் நன்மைகள் பெற்றிடுவாய் 1. பாவத்தின் மரித்த உன்னை உயிர்ப்பிக்க பரிவுடன் தன்னையே தியாகம் ஈந்தார் சொரிந்தார் தமது தூய உதிரம் சொந்தமாய் உந்தனை கொண்டாடி நினைத்து 2. பாரங்களை சுமந்தே பாரினில் இளைத்தே வேதனையால் நீயும் வாடி முடிவதேன் பார சிலுவையை சுமந்த இயேசு உன் பாரங்கள் சுமப்பார் நம்பியே வருவாய் 3. வியாதியால் காயம் ஏகமாய் மாறிட விடுவிப்பார் இல்லை என்று ஏங்கித்தவித்தேன் வியாதிகள் போக்கிட காயங்கள் அடைந்தார் விசுவாசித்து வந்தால் சுகமதி பெறுவாய் 4. மாய உலகத்தில் இன்பங்கள் உன்னையே மாறாதீயிலே சதா மாண்டிட செய்யும் மகிமையின் இரட்சிப்பை மானிடர்க்களிக்க மரணத்தை ருசித்தார் மகிழ்வுடன் வருவாய் 5. மானிடர் மீதன்பு கொண்ட தேவசுதன் உந்தன் தேடியே உலகில் வந்தனர் உன்னையும் தன்னுடன் ஒன்றாய் இருத்திட தன்னையே தந்த வர் உன்னை அழைக்கிறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae En Aathma Naesar Ivar Paasamaay Unnai Azhaikkiraar Oti Vanthituvaay Un Thuyar Thutaippaar Naatitum Nanmaigal Perrituvaay 1. Paavatthin Marittha Unnai Uyirppikka Parivudan Thannaiyae Thiyaagam Eenthaar Sorinthaar Thamathu Thooya Uthiram Sondhamaay Undhanai Kontaati Ninaitthu 2. Paaranggalai Sumanthae Paarinil Ilaitthae Vaedhanaiyaal Neeyum Vaati Mutivathaen Paara Siluvaiyai Sumandha Yesu Un Paaranggal Sumappaar Nampiyae Varuvaay 3. Viyaathiyaal Kaayam Aegamaay Maarida Vituvippaar Illai Enru Aengkitthavitthaen Viyaathigal Pokkida Kaayanggal Atainthaar Visuvaasitthu Vanthaal Sugamathi Peruvaay 4. Maaya Ulakatthil Inbanggal Unnaiyae Maaraatheeyilae Sathaa Maantida Seyyum Makimaiyin Iratsippai Maanidarkkalikka Maranatthai Rusitthaar Makizhvudan Varuvaay 5. Maanidar Meedhanpu Konda Thaevasudhan Undhan Thaetiyae Ulakil Vandhanar Unnaiyum Thannudan Onraay Irutthida Thannaiyae Thandha Var Unnai Azhaikkiraar