பாடல் #31539
இயேசுவை முழுமனதாலே
🔤 Yesuvai Muzhumanathaalae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவை முழுமனதாலே சேவை செய்வேன் என் நேசர் அன்பாலே, தேடி என் பாவங்கள் காணவும் அரிதே, தேவகுமாரன் தம் தோள் அதன் மீது, நேசமுடன் சுமந்தளித்தாரே. 1. காரிருள் மூடின வேளை, கருணையின் கதிர்கள் வீசினாலே, பாருலகதிலே பகைவரின் எதிரே மாளவிடாதே மகிமையாலே பாலகர் எமையே அலங்கரித்தாரே 2. கனிவுடன் கரம் அளித்தாரே. மாநிலமீதே மகிழ்ந்தழைத்தாரே தனிமை என்றுணரத் தாமே விடாது. வலிமை அளித்து, வழியில் முன் நடந்து. தாங்கினாரே சாய்ந்து விடாது. 3. அற்புதம் அவரது நேசம்! உற்றதில்லை இங்கிவ்வித பாசம். சுற்றிலும் சத்துரு சூழ்ந்து எழும்ப, முற்றிலும் முறித்திடப் பலமுறை முயல, உற்றவர் அன்பாய் முன்னின்று பேச 4. இயேசு என் சகலமும் உலகில் தேக சுகம் பேசிடும் பெலமும் ஏக துணையும், ஏழையின் அணையும் மேகங்கள் போன்ற துன்பத்தில் அரணும், சோரும் வேளை சாரும் பர்வதம். 5. புண்ணியனைப் புகழ்வேனே, புவிதனில் அவர் பேரன்பினாலே, பூதல மீதில் புதைத்திடாமல் நான் சுவிசேஷம் அதைக் கூறிடுவேனே தூயனைப் பாடித் துதித்திடுவேனே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvai Muzhumanathaalae Saevai Seyvaen En Naesar Anpaalae, Thaeti En Paavanggal Kaanavum Arithae, Thaevakumaaran Tham Thol Adhan Meethu, Naesamudan Sumandhalitthaarae. 1. Kaarirul Mootina Vaelai, Karunaiyin Kathirkal Veesinaalae, Paarulakathilae Pakaivarin Ethirae Maalavitaathae Makimaiyaalae Paalakar Emaiyae Alanggaritthaarae 2. Kanivudan Karam Alitthaarae. Maanilameethae Makizhndhazhaitthaarae Thanimai Enrunarath Thaamae Vitaathu. Valimai Alitthu, Vazhiyil Mun Natanthu. Thaangkinaarae Saaynthu Vitaathu. 3. Arpudham Avarathu Naesam! Urtrathillai Ingkivvidha Paasam. Surrilum Satthuru Soozhnthu Ezhumba, Murrilum Muritthidap Palamurai Muyala, Urtravar Anpaay Munninru Paesa 4. Yesu En Sakalamum Ulakil Thaega Sugam Paesitum Pelamum Aega Thunaiyum, Aezhaiyin Anaiyum Maeganggal Pondra Thunbatthil Aranum, Sorum Vaelai Saarum Parvatham. 5. Punniyanaip Pugazhvaenae, Puvidhanil Avar Paeranpinaalae, Poodhala Meethil Puthaitthitaamal Naan Suvisaesham Athaik Koorituvaenae Thooyanaip Paatith Thuthitthituvaenae.