பாடல் #31515
அதிகாலை நேரம் இயேசுவின்
🔤 Athikaalai Naeram Yesuvin
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிகாலை நேரம் இயேசுவின் சமூகம் அமைதலாய் காத்திருப்பேன் அவர் பேசும் வார்த்தைகள் ஏங்கும் என் இதயம் தேனமுதாய் உண்ண காத்திருப்பேன். 1. அதிகாலையில் எழுந்தவுடன் கர்த்தரைத் தேடுவேன் அதிகாலையில் இயேசுவின் முகத்தை தரிசிப்பேன் நாள் முழுதும் அவர் வசனம் என் தியானம் தேனிலும் இனிய அவர் வசனமே என் உணவு-2. 2. அதிகாலையில் பனி இறங்கும்போது இயேசுவின் கிருபை என் மேல் இறங்கும் என் ஜீவனைப் பார்க்கிலும் மேலானது அவர் கிருபை அந்த கிருபையை தினமும் போற்றிப் பாடுவேன்-2 3. சோர்வடைந்தவனுக்கு இனிய நல் வார்த்தை சொல்ல காலைதோறும் என்னை தட்டி எழுப்புகிறார் காலையில் கர்த்தரிடம் கற்றுக்கொண்டு நாள் முழுதும் அவர் இனிய செய்தி அறிவிப்பேன்-2 4. புல்லாங்குழலே, வீணையே, சுரமண்டலமே அதிகாலமே எழுந்து முழங்குங்கள் அதிகாலையில் இயேசுவைப் பாடிப் புகழுவோம் அவர் கிருபை தினமும் புத்தம் புதிது புதிது-2 5. கர்த்தரின் புதுக்கிருபைகளை அதிகாலையில் பாடுவேன் என்னை மீட்க தம்மையே விலையாக ஈந்து இரத்தம் சிந்தினாரே இராஜவஸ்திரம் கோல் தூதர்களின் ஆராதனை விட்டு வந்தாரே சிங்காசனத்திலிருந்து அடிமையாக சிலுவைக்கு வந்தாரே-2 6. அதிகாலையில் பூத்துக்குலுங்கும் வண்ண வண்ண பூக்கள் போல அதிகாலையில் இயேசுவின் கிருபை புத்தம் புதிது புதிது இயேசுவின் கிருபைமேல் கிருபைக்கு அளவே இல்லை அவர் இரக்கங்களுக்கு முடிவே இல்லை-2 7. அதிகாலையில் பறவைகள் இனிய இசையில் பாடும்போது அதிகாலையில் நானும் மதுர கானங்கள் பாடுகிறேன் இயேசுவின் மதுரமான கிருபையைப் பாட ஏழிசையும் போதா இயேசுவின் இனிய கிருபையை பாட பதினாறு நரம்பு வீணையும் போதா-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athikaalai Naeram Yesuvin Samoogam Amaidhalaay Kaatthiruppaen Avar Paesum Vaartthaigal Aengkum En Idhayam Thaenamuthaay Unna Kaatthiruppaen. 1. Athikaalaiyil Ezhundhavudan Karttharaith Thaetuvaen Athikaalaiyil Yesuvin Mugatthai Tharisippaen Naal Muzhuthum Avar Vasanam En Thiyaanam Thaenilum Iniya Avar Vasanamae En Unavu-2. 2. Athikaalaiyil Pani Irangkumpothu Yesuvin Kirupai En Mael Irangkum En Jeevanaip Paarkkilum Maelaanathu Avar Kirupai Andha Kirupaiyai Thinamum Porrip Paatuvaen-2 3. Sorvataindhavanukku Iniya Nal Vaartthai Solla Kaalaithorum Ennai Thatti Ezhuppukiraar Kaalaiyil Karttharidam Karrukkontu Naal Muzhuthum Avar Iniya Seythi Arivippaen-2 4. Pullaangkuzhalae, Veenaiyae, Suramandalamae Athikaalamae Ezhunthu Muzhangkunggal Athikaalaiyil Yesuvaip Paatip Pugazhuvom Avar Kirupai Thinamum Puttham Puthithu Puthithu-2 5. Karttharin Puthukkirupaigalai Athikaalaiyil Paatuvaen Ennai Meetka Thammaiyae Vilaiyaaga Eenthu Rattham Sinthinaarae Iraajavasthiram Kol Thoodharkalin Aaraadhanai Vittu Vanthaarae Singkaasanatthilirunthu Atimaiyaaga Siluvaikku Vanthaarae-2 6. Athikaalaiyil Pootthukkulungkum Vanna Vanna Pookkal Pola Athikaalaiyil Yesuvin Kirupai Puttham Puthithu Puthithu Yesuvin Kirupaimael Kirupaikku Alavae Illai Avar Irakkanggalukku Mutivae Illai-2 7. Athikaalaiyil Paravaigal Iniya Isaiyil Paatumpothu Athikaalaiyil Naanum Mathura Kaananggal Paatukiraen Yesuvin Mathuramaana Kirupaiyaip Paada Aezhisaiyum Pothaa Yesuvin Iniya Kirupaiyai Paada Pathinaaru Narampu Veenaiyum Pothaa-2