பாடல் #3145
நேசபரனைத் துதிப்பாய்
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
நேசபரனைத் துதிப்பாய, ஓ நெஞ்சமே! தாசன் புவியோரில் மா நீசனெனைப்பிடித்த மோசம் நிவிர்த்தி செய்த யேசுக்ருபாசமுத்ர. - நேச 1.மரணம் பிடித்துமென்னை வல்லவன் விடுத்தார்; வலிய பாதாளம் நின்றே மகிமையா யெடுத்தார், சரணமென்றே புது உயிர்தனைக் கொடுத்தார்; சத்ரு எனக்குச் சேதம் புரியாது தடுத்தார். - நேச 2.பாதக னெனக்குண்டோ கொஞ்சமும் பாத்திரம்? பரனருள் நன்மைக் கிப்பாவி எம்மாத்திரம்? தீதன் ருசித்த நலம் அன்பு மா காத்திரம், செப்புவேன் இங்குமங்கும் எளியனின் தோத்திரம். - நேச 3.அடியனுக்கவர் செய்த அன்புரைத்தாமோ? ஆயிரம் நாவினால் சொல்வது போமோ? இடிதனைத் தாங்கிட மனிதராலாமோ? இயேசெனைத் தாங்கையில் என்னுயிர் போமோ? - நேச 4.உள்ளும் புறம்புமான எந்த வில்லங்கம் உலகிலெனக்கு வரும்? எவ்விதப் பங்கம் தள்ளியே காத்திடும் தகும் யூதா சிங்கம், தாரணியினில் தனக்கிணையிலாத் தங்கம். - நேச