பாடல் #3143
நேச யேசு கிறிஸ்து தேவே
🎙 கிறிஸ்தவ பாடல்
1. நேச யேசு கிறிஸ்து தேவே உம்மிலானந்திப்பேனே! நீர் மரித்துயிர்த்ததாலே என் ரட்சிப்புண்டாயிற்றே! நம்பியும்மை நம்பியும்மை ஏழை நான் பின்பற்றுவேன். 2. சாக்குழியில் நீரிறங்கிப் புதை பட்டீரெனக்காய்! சொற்படி நீரிலிறந்கிப் புதை பட்டேனுமக்காய்! நம்பியும்மை நம்பியும்மை ஏழை நான் பின்பற்றுவேன். 3. மூன்றாம் நாளுயிர்த் தெழுந்து சாவை வென்றீர் யேசுவே! நானும் உந்தன் தாள் பிடித்து எழுந்திட்டேன் காத்தாவே. யேசு நாதா! தேவ சுதா! நம்பி தத்தம் செய்கிறேன். 4. பாவச் செய்கை என்னில் இனி முற்றுமாக அழிந்து நல்ல சுத்த ஜீவியமே ஓங்கச் செய்யு மெழுந்து யேசு நாதா! தேவ சுதா! நம்பித் தத்தம் செய்கிறேன்.