பாடல் #3127
நெஞ்சமே தள்ளாடி நொந்து
🔤 Nenjjamae Thallaati Nonthu
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நெஞ்சமே, தள்ளாடி நொந்து, நீ கலங்காதே; - கிறிஸ் தேசுவே உனக்கு நல்ல நேச துணையே. 1. தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக - உன்னை தாககியே பகைஞராக நின்ற போதிலும், --- நெஞ்சமே 2. அன்னை தந்தை ஆனவரும் பின்ன பேதமாய் - உனை அங்கலாய்க்க விட்டெளிஞன் ஆன போதிலும் --- நெஞ்சமே 3. ஜீவனம் இழந்து துன்பம் மேவினாலும், - மா சிறுமையாய்ச் சகிக்கொணா வறுமை கொண்டாலும். --- நெஞ்சமே 4. பஞ்சமும் பசியும் வந்து கெஞ்ச வைத்தாலும், - மிகு பாரமாய்ச் சுமை உன்மேலே பற்றி நின்றாலும். --- நெஞ்சமே 5. கெட்ட நோயிலும் நீ அகப் பட்டுழன்றாலும், --- எந்தக் கேடுகள் உன்மேலே வந்து மூடினாலும். --- நெஞ்சமெ 6. ஆன வீடு தானும் கொள்ளை ஆன போதிலும், - கிறிஸ் தண்ணலே, உனக் கெல்லாம் என்றெண்ணி நிறைவாய் --- நெஞ்சமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nenjjamae, Thallaati Nonthu, Nee Kalangkaathae; - Kiris Thaesuvae Unakku Nalla Naesa Thunaiyae. 1. Thanjjamaana Thozharkalum Vanjjakamaaga - Unnai Thaagakiyae Pakainjaraaga Nindra Pothilum, --- Nenjjamae 2. Annai Thanthai Aanavarum Pinna Paedhamaay - Unai Anggalaaykka Vittelinjan Aana Pothilum --- Nenjjamae 3. Jeevanam Izhanthu Thunbam Maevinaalum, - Maa Sirumaiyaaych Sakikkonaa Varumai Kontaalum. --- Nenjjamae 4. Panjjamum Pasiyum Vanthu Kenjja Vaitthaalum, - Miku Paaramaaych Sumai Unmaelae Parri Ninraalum. --- Nenjjamae 5. Ketta Noyilum Nee Agap Pattuzhanraalum, --- Endhak Kaetugal Unmaelae Vanthu Mootinaalum. --- Nenjjame 6. Aana Veetu Thaanum Kollai Aana Pothilum, - Kiris Thannalae, Unak Kellaam Enrenni Niraivaay --- Nenjjamae