பாடல் #3125
நீலவானில் இடியெழுந்து
🔤 Neelavaanil Itiyezhunthu
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீலவானில் இடியெழுந்து சூரியன் மறைந்தது நேரில் நின்ற பாறையொடு பூமியும் வெடித்தது கோலமிக்க கல்லறைகள் கூவியே பிளந்தது கோவிலின் தரைச்சீலை பாதியாய் கிழிந்தது பூவிருந்த பொன் மரங்கள் போய்விழுந்து விட்டது பூமி தன்னை வானத்து மீனினங்கள் தொட்டது காவலர்கள் மெய் சிலிர்த்து கைநடுங்கிநின்றனர் தேவமைந்தன் என்ற செய்தி உண்மையென்று கண்டனர் மானிடனே உணர்வில்லையோ - உன்கல் மனமும் உருகலையோ கல்வாரி மலை மேலே கர்த்தர் உம் வேதனை கண்ணீர் பெருகுதே - கல் நெஞ்சம் உருகுதே முப்பது வெள்ளியின் மோகமோ - யூதாஸ் முத்தத்தால் உம்மை விற்கலாகுமோ வஞ்சகனாய் நண்பன் மாறிவிட்டான் வலியவர்க்கே உம்மைக் காட்டித் தந்தான் இதயமில்லாதோர் தேடி வந்தார்கள் இரக்கமில்லாதோர் உம்மை பிடித்துச் சென்றார்கள் கல்வாரி மலை மேலே கர்த்தர் உம் வேதனை கண்ணீர் பெருகுதே - கல் நெஞ்சம் உருகுதே இரத்தமும் நதிபோல போகுதய்யா - என் இதயமும் தனலாய் வேகுதய்யா உத்தமரின் உடலும் துடிக்குதய்யா உலகத்தர்களின் உள்ளம் களிக்குதய்யா எத்தர்கள் நெஞ்சில் இரக்கமுமில்லை நித்தமும் நினைக்கையில் உறக்கமில்லை கல்வாரி மலை மேலே கர்த்தர் உம் வேதனை கண்ணீர் பெருகுதே - கல் நெஞ்சம் உருகுதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neelavaanil Itiyezhunthu Sooriyan Maraindhathu Naeril Nindra Paaraiyotu Poomiyum Vetitthathu Kolamikka Kallaraigal Kooviyae Pilandhathu Kovilin Tharaichseelai Paathiyaay Kizhindhathu Poovirundha Pon Maranggal Poyvizhunthu Vittathu Poomi Thannai Vaanatthu Meeninanggal Thottathu Kaavalarkal Mey Silirtthu Kainatungkinindranar Thaevamaindhan Endra Seythi Unmaiyenru Kandanar Maanidanae Unarvillaiyo - Unkal Manamum Urugalaiyo Kalvaari Malai Maelae Kartthar Um Vaedhanai Kanneer Perukuthae - Kal Nenjjam Urukuthae Muppathu Velliyin Mogamo - Yoothaas Mutthatthaal Ummai Virkalaakumo Vanjjakanaay Nanpan Maarivittaan Valiyavarkkae Ummaik Kaattith Thanthaan Idhayamillaathor Thaeti Vanthaarkal Irakkamillaathor Ummai Pititthuch Senraarkal Kalvaari Malai Maelae Kartthar Um Vaedhanai Kanneer Perukuthae - Kal Nenjjam Urukuthae Ratthamum Nathipola Pokudhayyaa - En Idhayamum Thanalaay Vaekudhayyaa Utthamarin Udalum Thutikkudhayyaa Ulakattharkalin Ullam Kalikkudhayyaa Ettharkal Nenjsil Irakkamumillai Nitthamum Ninaikkaiyil Urakkamillai Kalvaari Malai Maelae Kartthar Um Vaedhanai Kanneer Perukuthae - Kal Nenjjam Urukuthae