பாடல் #3120
என் ஆண்டவா உம் கர வல்ல கிரியை
🔤 En Aandavaa Um Kara Valla Kiriyai
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. என் ஆண்டவா ! உம் கர வல்ல கிரியை உலகெங்கும் நான் கண்டு வியந்தேன்; விண்மீன்களும் பேரிடி முழக்கமும் உம் வல்லமை எடுத்துரைக்குதே. என் ஆத்துமா மகிழ்ந்து பாடுதே! நீர் வல்லவர் ! மா வல்லவர் ! போற்றிடுவேன் என் அன்பின் ரட்சகா ! நீர் வல்லவர் ! மா வல்லவர் ! 2. காடுகளின் பசும் மரங்கள் மீது கானம் பாடும் பறவைக் கூட்டங்கள்; உயர் மலை உன்னத காட்சி கண்டேன், தென்றல் காற்றும் தெளிநீரோடையும் — என் 3. தேவ பிதா தம் ஏக மைந்தனையும் மரிக்கவே அனுப்பி வைத்தாரே; சிலுவையில் என் பாவ பாரமேற்று ரத்தம் சிந்தி பாவ பலியானார் — என் 4. மகிமையாய் தூதர் ஆர்ப்பரிப்போடு என்னைச் சேர்க்க இயேசு வருவாரே உள்ளம் பொங்கி மகிழ்ச்சியோடு நானும் வல்லவரை வணங்கித் தொழுவேன் — என்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. En Aandavaa ! Um Kara Valla Kiriyai Ulakengkum Naan Kantu Viyanthaen; Vinmeenkalum Paeriti Muzhakkamum Um Vallamai Etutthuraikkuthae. En Aatthumaa Makizhnthu Paatuthae! Neer Vallavar ! Maa Vallavar ! Porrituvaen En Anpin Ratsakaa ! Neer Vallavar ! Maa Vallavar ! 2. Kaatugalin Pasum Maranggal Meethu Kaanam Paatum Paravaik Koottanggal; Uyar Malai Unnatha Kaatsi Kantaen, Thendral Kaarrum Thelineerotaiyum — En 3. Thaeva Pithaa Tham Aega Maindhanaiyum Marikkavae Anuppi Vaitthaarae; Siluvaiyil En Paava Paaramaerru Rattham Sinthi Paava Paliyaanaar — En 4. Makimaiyaay Thoodhar Aarpparippotu Ennaich Saerkka Yesu Varuvaarae Ullam Pongki Makizhchsiyotu Naanum Vallavarai Vanangkith Thozhuvaen — En