பாடல் #3110
நீர் தந்த நன்மை யாவையும்
🔤 Neer Thandha Nanmai Yaavaiyum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. நீர் தந்த நன்மை யாவையும் நினைத்து, கர்த்தரே, மகிழ்ச்சியோடு என்றைக்கும் நான் துதி செய்வேனே. 2. குழந்தைப் பருவமுதல் குறைவில்லாமலே எனக்களித்த நன்மைகள் ஏராளமானதே. 3. என்னோடு வாலிபத்திலும் இருந்தீர் தேவரீர்; இக்கட்டுண்டான காலத்தும் விழாமல் தாங்கினீர். 4. அநேகமான தீமைகள் அண்டாமல் தடுத்தீர்; கைம்மாறில்லாத நன்மைகள் கர்த்தாவே, பொழிந்தீர். 5. இம்மையில் என்றும் தாழ்மையாய் தெய்வன்பை நினைப்பேன்; மறுமையில் வணக்கமாய் உம்மையே போற்றுவேன். 6. புகழ்ச்சி, துதி, தோத்திரம், ஒன்றான உமக்கே இகத்திலும் பரத்திலும் எழும்பத் தகுமே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Neer Thandha Nanmai Yaavaiyum Ninaitthu, Karttharae, Makizhchsiyotu Enraikkum Naan Thuthi Seyvaenae. 2. Kuzhanthaip Paruvamudhal Kuraivillaamalae Enakkalittha Nanmaigal Aeraalamaanathae. 3. Ennotu Vaalibatthilum Iruntheer Thaevareer; Ikkattuntaana Kaalatthum Vizhaamal Thaangkineer. 4. Anaegamaana Theemaigal Antaamal Thatuttheer; Kaimmaarillaadha Nanmaigal Kartthaavae, Peாzhintheer. 5. Immaiyil Enrum Thaazhmaiyaay Theyvanpai Ninaippaen; Marumaiyil Vanakkamaay Ummaiyae Porruvaen. 6. Pugazhchsi, Thuthi, Thotthiram, Onraana Umakkae Igatthilum Paratthilum Ezhumbath Thakumae.