பாடல் #3106
நீர் கொடுத்த வாழ்வு
🔤 Neer Kotuttha Vaazhvu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் கொடுத்த வாழ்வு இது நினைக்கினறேன் தேவா நினையாத நேரத்திலும் எமைக் காக்கும் இறைவா பார் முழக்க உமதன்பு பரவுகின்றதல்லவா பாவியெம்மை மீட்க வந்த இரக்கத்தின் தலைவா தேவ பிள்ளையாகிவிடத் திருமுழுக்கும் பெறுவேன் தெவிட்டாத தீந்தமிழில் உமதன்பை இசைப்பேன் மறக்காத மனம் தன்னை மலரடிக்குத் தருவேன் மனம் திரும்பி உம்மோடு மரித்திடவும் வருவேன் அன்னை தரா அரவணைப்பை உமதன்பில் பெறுவேன் ஆண்டவரே என்று உமை அணைத்துவிடத் துடிப்பேன் நீர் கொடுத்த வாக்குகளை வேதமதில் படிப்பேன் நிலையான ஜீவனையும் உம்மிடத்தில் கேட்பேன் இறைவா என் இயேசு என இதயத்தில் நினைப்பேன் இணையில்லா உமதன்பை பருகிவிடத் துடிப்பேன் கரை காண முடியாத கன்மலையைக் காண்பேன் கர்த்தா என்றே உமது காலடியைத் துதிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Kotuttha Vaazhvu Ithu Ninaikkinaraen Thaevaa Ninaiyaadha Naeratthilum Emaik Kaakkum Iraivaa Paar Muzhakka Umathanpu Paravukindrathallavaa Paaviyemmai Meetka Vandha Irakkatthin Thalaivaa Thaeva Pillaiyaakividath Thirumuzhukkum Peruvaen Thevittaadha Theendhamizhil Umathanpai Isaippaen Marakkaadha Manam Thannai Malaratikkuth Tharuvaen Manam Thirumpi Ummotu Maritthidavum Varuvaen Annai Tharaa Aravanaippai Umathanpil Peruvaen Aandavarae Enru Umai Anaitthuvidath Thutippaen Neer Kotuttha Vaakkugalai Vaedhamathil Patippaen Nilaiyaana Jeevanaiyum Ummidatthil Kaetpaen Iraivaa En Yesu Ena Idhayatthil Ninaippaen Inaiyillaa Umathanpai Parukividath Thutippaen Karai Kaana Mutiyaadha Kanmalaiyaik Kaanpaen Kartthaa Enrae Umathu Kaalatiyaith Thuthippaen