பாடல் #3105
நீர் ஒருவர் மட்டும்
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
நீர் ஒருவர் மட்டும் இயேசுவே என்னைவிட்டு நீங்காதிருப்பது ஏனோ? தெய்வீக அன்பால் தானோ? என்னை பாடி மகிழ்வித்த புல்லினங்கள் தங்கள் கூடுகள் தேடி பறந்த பின்னும் - 2 நான் வாழ்ந்த காலத்து நண்பரெல்லாம் நான் தாழ்ந்த காலத்தில் பிரிந்த பின்னும் எந்தன் மேனி தழுவிய இளந்தென்றல் சொந்த தாய் கடலோடு கலந்த பின்னும் - 2 எந்தன் பாதையின் விளக்காய் பகலவனும் வந்து காரிருள் மாயையாய் பிரிந்த பின்னும்