பாடல் #307
அழைப்பு ஒன்று உன்னக்கு
🔤 Azhaippu Onru Unnakku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அழைப்பு ஒன்று உனக்கு உண்டு எழுந்து வா மகனே-இறைவன் சுமக்கும் சிலுவை நமக்கும் உண்டு தூக்கி வா மகனே உபத்திரவங்கள் நிறைந்த உலகம் உன்னைத் துன்பப்படுத்தும்-அதை ஜெயித்த இறைவன் அழைப்பை ஏற்று விரைந்து வா மகனே உயிரைத் தந்து உலகில் உன்னை உலவவிட்ட இறைவன்-இன்று உன் அழுக்கை நீக்கி ஆத்துமாவை தேற்றவே அழைக்கிறார் பதுக்கிப் பொருளை சேர்க்கும் உலகில் பாவம் குறைந்திடுமா-சிலுவை சுமக்கும் இயேசு கிருபையின்றி மீட்பும் அடைந்திடுமா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Azhaippu Onru Unakku Untu Ezhunthu Vaa Makanae-iraivan Sumakkum Siluvai Namakkum Untu Thookki Vaa Makanae Ubatthiravanggal Niraindha Ulakam Unnaith Thunbappatutthum-athai Jeyittha Iraivan Azhaippai Aerru Virainthu Vaa Makanae Uyiraith Thanthu Ulakil Unnai Ulavavitta Iraivan-inru Un Azhukkai Neekki Aatthumaavai Thaertravae Azhaikkiraar Pathukkip Porulai Saerkkum Ulakil Paavam Kurainthitumaa-siluvai Sumakkum Yesu Kirupaiyinri Meetpum Atainthitumaa