பாடல் #3061
நீ தேடும் நிம்மதியை என் இயேசு
🔤 Nee Thaetum Nimmathiyai En Yesu
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீ தேடும் நிம்மதியை என் இயேசு தந்திடுவார் நீ தேடும் விடுதலையை என் நேசர் தந்திடுவார் நாசம் ஏதும் அணுகாமல் நேசர் உன்னை - காத்திடுவார் நிற்பதும் நிலைப்பதும் என் தேவ கிருபையே - இதை நீயும் இன்று மறந்திட்டாலே - நிம்மதி வாழ்வினில் இல்லையே வருத்தப்படடு பாரம் சுமந்துவாழ்ந்திட்ட நாட்களெல்லாம் வேதனை வியாகுலம் தீராத சோதனை அஞ்சிடாதே அன்பர் இயேசு உன்னருகே - நிற்கின்றார் அழைத்திடு அழைத்திடு ஆண்டவர் நிம்மதி தந்திடுவார் கலங்காதே என் நண்பனே; கண்ணீரை சிந்தாதே உந்தனின் துக்கங்கள் சந்தோஷமாகுமே உள்ளத்தில் அமைதியின்றி ஏங்கி நெஞ்சமே நிம்மதி தந்திடும் இயேசுவை நம்பி வந்திடு உலகத்தின் மேன்மை செல்வம் - ஒன்றுக்கும் உதவாது உந்தனின் கஷ்டங்கள் அதினாலே தீராது இயேசுசாமி ஒருவர் மட்டும் உன்னையும் இரட்சிப்பார் நம்பி நீ வந்திடு நெஞ்சுக்கு நிம்மதி தந்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nee Thaetum Nimmathiyai En Yesu Thanthituvaar Nee Thaetum Vitudhalaiyai En Naesar Thanthituvaar Naasam Aethum Anukaamal Naesar Unnai - Kaatthituvaar Nirpathum Nilaippathum En Thaeva Kirupaiyae - Ithai Neeyum Inru Maranthittaalae - Nimmathi Vaazhvinil Illaiyae Varutthappatatu Paaram Sumanthuvaazhnthitta Naatkalellaam Vaedhanai Viyaakulam Theeraadha Sodhanai Anjsitaathae Anbar Yesu Unnarukae - Nirkinraar Azhaitthitu Azhaitthitu Aandavar Nimmathi Thanthituvaar Kalangkaathae En Nanpanae; Kanneerai Sinthaathae Undhanin Thukkanggal Santhoshamaakumae Ullatthil Amaithiyinri Aengki Nenjjamae Nimmathi Thanthitum Yesuvai Nampi Vanthitu Ulakatthin Maenmai Selvam - Onrukkum Udhavaathu Undhanin Kashtanggal Athinaalae Theeraathu Yesusaami Oruvar Mattum Unnaiyum Iratsippaar Nampi Nee Vanthitu Nenjsukku Nimmathi Thanthituvaar