பாடல் #3056
நீ இல்லா உலகில் எனக்கு நிம்மதி
🔤 Nee Illaa Ulakil Enakku Nimmathi
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீ இல்லா உலகில் எனக்கு நிம்மதி இல்லே நித்தமும் உம்மை நினைக்கா விட்டால் உறக்கமும் இல்லே உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் உமக்கமாக பேசுகிறீர் உம் குரலை கேட்டவுடன் - நான் உருகிப் போகின்றேன் எத்தனை ஆண்டுகள் உலகில் நானும் வாழ்ந்து விட்டேன் எத்தனை தெய்வங்கள் உண்டோ வணங்கிப் வார்த்துவிட்டேன் இத்தனை காலமும் வறுமையில் வாடி சோர்ந்து விட்டேன் அத்தனை தெய்வமும் வேண்டாம் என்று தள்ளிவிடடேன் இயேசுவை எந்தன் நெஞ்சில் நானும் வைத்துவிட்டேன் பேசும் தெய்வம் இயேசு என்று கண்டு கொண்டேன் எத்தனை எத்தனை நன்மைகள் அவரால் பெற்றுக் கொண்டேன் இயேசுவைப் போல தெய்வம் உலகில் இல்லையென்பேன் உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் உமக்கமாக பேசுகிறீர் உம் குரலை கேட்டவுடன் - நான் உருகிப் போகின்றேன் கண்முன் நிற்கும் மனிதரின் அன்பைக் காணுகிறேன் கைவிடப்பட்டவன் அனாதை எனறு கதறுகிறேன் உதவி செய்திட ஒருவரும் இன்றி வாடுகிறேன் உண்மை அன்பைத்தேடி தேடி ஓடுகிறேன் அனாதையான என்னைக் கண்டவர் நீரய்யா அழாதே என்று சொல்லி அணைத்தீர் இயேசய்யா உண்ண உணவும் குறைவின்றி தந்தீரய்யா உந்தன் அன்பில் வாழ வைத்தவர் நீரய்யா உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் உமக்கமாக பேசுகிறீர் உம் குரலை கேட்டவுடன் - நான் உருகிப் போகின்றேன் கண்கள் என்னும் மாளிகையில் உம்மை வைத்திடுவேன் - இரு கண்ணிமைகள் என்னும் கதவுகளால் உம்மை பூட்டிடுவோன் என்னை விட்டுப் பிரியாமல் நான் பார்த்திடுவேன் உம்மை எனக்கு மட்டும் சொந்தம் ஆக்கி மகிழ்ந்திடுவேன் உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் உமக்கமாக பேசுகிறீர் உம் குரலை கேட்டவுடன் - நான் உருகிப் போகின்றேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nee Illaa Ulakil Enakku Nimmathi Illae Nitthamum Ummai Ninaikkaa Vittaal Urakkamum Illae Ummai Nokkip Paarkkinraen Umakkamaaga Paesukireer Um Kuralai Kaettavudan - Naan Urukip Pokinraen Etthanai Aantugal Ulakil Naanum Vaazhnthu Vittaen Etthanai Theyvanggal Unto Vanangkip Vaartthuvittaen Itthanai Kaalamum Varumaiyil Vaati Sornthu Vittaen Atthanai Theyvamum Vaentaam Enru Thallividataen Yesuvai Endhan Nenjsil Naanum Vaitthuvittaen Paesum Theyvam Yesu Enru Kantu Kontaen Etthanai Etthanai Nanmaigal Avaraal Perruk Kontaen Yesuvaip Pola Theyvam Ulakil Illaiyenpaen Ummai Nokkip Paarkkinraen Umakkamaaga Paesukireer Um Kuralai Kaettavudan - Naan Urukip Pokinraen Kanmun Nirkum Manidharin Anpaik Kaanukiraen Kaividappattavan Anaathai Enaru Katharukiraen Udhavi Seythida Oruvarum Inri Vaatukiraen Unmai Anpaitthaeti Thaeti Otukiraen Anaathaiyaana Ennaik Kandavar Neerayyaa Azhaathae Enru Solli Anaittheer Yesayyaa Unna Unavum Kuraivinri Thantheerayyaa Undhan Anpil Vaazha Vaitthavar Neerayyaa Ummai Nokkip Paarkkinraen Umakkamaaga Paesukireer Um Kuralai Kaettavudan - Naan Urukip Pokinraen Kankal Ennum Maalikaiyil Ummai Vaitthituvaen - Iru Kannimaigal Ennum Kathavugalaal Ummai Poottituvon Ennai Vittup Piriyaamal Naan Paartthituvaen Ummai Enakku Mattum Sondham Aakki Makizhnthituvaen Ummai Nokkip Paarkkinraen Umakkamaaga Paesukireer Um Kuralai Kaettavudan - Naan Urukip Pokinraen