பாடல் #3055
நீ இல்லா உலகினிலே நான் வாழ
🔤 Nee Illaa Ulakinilae Naan Vaazha
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீ இல்லா உலகினிலே நான் வாழ வழியுமில்லே உந்தன் துணை ஏதுமின்றி என் ஜீவன் வாழ்வதில்லே - என் நெஞ்சம் துடிப்பதில்லை நான் வந்த வழி தெரியலே, போற வழிபுரியலே உதவி செய்ய எவருமில்லே எனக்கு வேஷமாகிப் போன இந்த உலகத்திலே பாசம் வச்சு பாதுகாக்க எவருமில்லே இனி வாழ்வது நானுமில்லே என்னுடைய பெலனுமில்லே இயேசுவே என்னில் நீர் ஜீவிக்கின்றீர் கர்த்தரே எந்தன் பெலனானீர் நித்தமும் எந்தன் நிழலானீர் இந்த உலகில் என் வாழ்வு ஒரு முறைதானே இயேசுவே அது உமக்காய் தானே - கிறிஸ்தேசுவே வாழும் வரை இயேசுவுக்காய் ஊழியம் செய்வேன் காலமெல்லாம் உம்மை மட்டும் நம்பி இருப்பேன் - என் வாழ் நாளெல்லாம் உம்மை நான் உயர்த்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nee Illaa Ulakinilae Naan Vaazha Vazhiyumillae Undhan Thunai Aethuminri En Jeevan Vaazhvathillae - En Nenjjam Thutippathillai Naan Vandha Vazhi Theriyalae, Pora Vazhipuriyalae Udhavi Seyya Evarumillae Enakku Vaeshamaakip Pona Indha Ulakatthilae Paasam Vachsu Paathukaakka Evarumillae Ini Vaazhvathu Naanumillae Ennutaiya Pelanumillae Yesuvae Ennil Neer Jeevikkinreer Karttharae Endhan Pelanaaneer Nitthamum Endhan Nizhalaaneer Indha Ulakil En Vaazhvu Oru Muraithaanae Yesuvae Athu Umakkaay Thaanae - Kiristhaesuvae Vaazhum Varai Yesuvukkaay Oozhiyam Seyvaen Kaalamellaam Ummai Mattum Nampi Iruppaen - En Vaazh Naalellaam Ummai Naan Uyartthituvaen