பாடல் #3052
நிறைவுற வரந்தா
🔤 Niraivura Varanthaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நிறைவுற வரந்தா. - நியமகம் நிறைவுற வரந்தா. நித்திய திரித்துவ சத்தியபரா என்றும் 1.உரிய தொண்டருக்கில்லமே, - இங்கு உண்டமைக்கும் எங்கள் தெய்வமே! உன் திருத்தாளரண் எங்களுக்கே சரண். 2.ஆதம் தனித்த நிலையது - நல்ல தல்லவென்று கண்டவனது அங்கமே நின்றொரு மங்கையே தந்தனை. 3.ஆபிரகாம் எலியே சரும் - மன் றாடிய வேண்டுதல் கேட்டொரு அங்கனை நெஞ்ச மிணங்க வகை செய்தாய். 4.உலகம் பேயுடல் முப்பகை - இவர் ஒப்பந்தத் தீண்டா துனது கை ஓங்கியே, தாங்கி யுறுதுணை தந்துமே 5.ஒப்பந்தத் தாலிரு சார்பினர் - தமை உற்றவர் மற்றவர் நற்றவர் உன்னதா சீரடைந்துன் மகிமை தர.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Niraivura Varanthaa. - Niyamakam Niraivura Varanthaa. Nitthiya Thiritthuva Satthiyaparaa Enrum 1.uriya Thondarukkillamae, - Ingku Undamaikkum Enggal Theyvamae! Un Thirutthaalaran Enggalukkae Saran. 2.aadham Thanittha Nilaiyathu - Nalla Thallavenru Kandavanathu Anggamae Ninroru Mangkaiyae Thandhanai. 3.aapirakaam Eliyae Sarum - Man Raatiya Vaentudhal Kaettoru Angganai Nenjja Minangga Vakai Seythaay. 4.ulakam Paeyudal Muppakai - Ivar Oppandhath Theentaa Thunathu Kai Ongkiyae, Thaangki Yuruthunai Thanthumae 5.oppandhath Thaaliru Saarpinar - Thamai Urtravar Martravar Nartravar Unnathaa Seeratainthun Makimai Thara.