பாடல் #3047
நிர்ப்பந்த பாவி யேசுவால் விமோசனம்
🎙 கிறிஸ்தவ பாடல்
1. நிர்ப்பந்த பாவி யேசுவால் விமோசனம் உண்டாம். மெய் வேதவாக்கை நம்பினால் மா பாரம் நீங்குமாம். நம்பி வந்தால் (2) யேசுவண்டையில் ரட்சிப்பாரே (2) இந்த நேரத்தில். 2. மாசற்ற ரத்தம் சிந்தியே பேர் வாழ்வுண்டாக்கினார். தூய்தான செந்நீர் ஸ்நானத்தால் சுத்தாங்கம் பண்ணுவார். 3. பேரின்ப ராஜ்யம் சேரவும் மெய்வழி யேசுவே சமஸ்த நன்மை பெறவும் கைமாறில்லாமலே. 4. மெய்பாக்யர் கூட்டம் சேருவாய் ப்ரயாணம் செய்யவும் மெய்யான ஜீவன் அடைவாய் அனந்த சந்தோஷம்.