பாடல் #3039
நினையேன் மணம்
🔤 Ninaiyaen Manam
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நினையேன், மனம், நினையேன் தினம் உனை மீட்ட யேசுவையே. கனமேவிய மனு வேலனைக் கன காசன சுதனை. - நினை 1.கவன முடன் நீடி, உனக் காக அருள் தேடிப், புவன மதில் பிறந்து திவ்ய புதுமை மிகச் சிறந்து, தவன முறு ஆத்மா ஜீவ தண்ணீர் கொள, சும்மா பவம் நீக்கிய வானாசனப் பதியை, சுரர் கதியை - நினை 2.நரக அழலாலே கெடு நாசம் வந்த காலே உருகி, மனம் இரங்கித், தொலைத் துண்மையுடன் இணங்கி, பரமனோடு உறவாக்கி, மெய்ப்பலனும் பெறத் தாக்கி, பெருக நலம்புரிந்தோன், மறை பேதம் இன்றி அறைந் தோன். - நினை 3.ஜெயமும், புத்ர சுவிகாரமும், சிறந்த நீதியும், மகா நயந்த பரிசுத்தம் தேவ ஞானமுடன் மீட்பும் சுயமாக்கியும் அளித்தும் தனதுயிரைப் பலிகொடுத்தும் பயன் ஏலவே, தூய ஆவியைப் பரிந்தோனையே கனிந்தே, - நினை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ninaiyaen, Manam, Ninaiyaen Thinam Unai Meetta Yaesuvaiyae. Kanamaeviya Manu Vaelanaik Kana Kaasana Sudhanai. - Ninai 1.kavana Mudan Neeti, Unak Kaaga Arul Thaetip, Puvana Mathil Piranthu Thivya Puthumai Migach Siranthu, Thavana Muru Aathmaa Jeeva Thanneer Kola, Summaa Pavam Neekkiya Vaanaasanap Pathiyai, Surar Kathiyai - Ninai 2.naraka Azhalaalae Ketu Naasam Vandha Kaalae Uruki, Manam Irangkith, Tholaith Thunmaiyudan Inangki, Paramanotu Uravaakki, Meyppalanum Perath Thaakki, Peruga Nalampurinthon, Marai Paedham Inri Arain Thon. - Ninai 3.jeyamum, Puthra Suvikaaramum, Sirandha Neethiyum, Makaa Nayandha Parisuttham Thaeva Njaanamudan Meetpum Suyamaakkiyum Alitthum Thanathuyiraip Palikotutthum Payan Aelavae, Thooya Aaviyaip Parinthonaiyae Kaninthae, - Ninai