பாடல் #3033
நித்தம் முயல் மனமே
🔤 Nittham Muyal Manamae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நித்தம் முயல் மனமே! பரி சுத்த ஜீவியத்தில் மெத்த வளர நீ. 1.அத்தன் யேசுவினில் பத்தியாய் அமர்ந்து சத்திய வேதத்தால் நித்தம் உன்னைப் போஷி! - நித் 2.அல்பகல் யேசுவோ டதிக நேரத்தை ஆசையாய்க் கழி நீ, அவரைப்போலாவாய். - நித் 3.தேவன்றன் பிள்ளைகள் யாவரையும் நேசி, ஆவலாய் எளியோர்க் கன்பாலுதவி செய். - நித் 4.யேசுவே உன்றனை என்றும் நடத்துவார்; இன்ப துன்பத்திலும் அன்பாய் நீ பின்செல்லு. - நித் 5.எந்த எண்ணத்தையும் யேசுவின் கீழ் ஆக்கி, உன்றன் உள்ளத்தில் அமர்ந்திரு சாந்தமாய். - நித் 6.மேவும் அன்பினுக்குள் தேவாவி நடத்த மேலான வாழ்வுக்குத் தக்கவனாகுவாய். - நித்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nittham Muyal Manamae! Pari Suttha Jeeviyatthil Mettha Valara Nee. 1.atthan Yaesuvinil Patthiyaay Amarnthu Satthiya Vaedhatthaal Nittham Unnaip Poshi! - Nith 2.alpakal Yaesuvo Tathiga Naeratthai Aasaiyaayk Kazhi Nee, Avaraippolaavaay. - Nith 3.devandran Pillaigal Yaavaraiyum Naesi, Aavalaay Eliyork Kanpaaludhavi Sey. - Nith 4.yaesuvae Undranai Enrum Natatthuvaar; Inba Thunbatthilum Anpaay Nee Pinsellu. - Nith 5.endha Ennatthaiyum Yaesuvin Keezh Aakki, Undran Ullatthil Amarnthiru Saandhamaay. - Nith 6.maevum Anpinukkul Thaevaavi Natattha Maelaana Vaazhvukkuth Thakkavanaakuvaay. - Nith