பாடல் #3030
நித்தம் அருள்செய்
🔤 Nittham Arulsey
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நித்தம் அருள்செய் தயாளனே! - எங்கள் நேசா யேசு மணாளனே! - ஸ்வாமி நித்தம். உத்தம சற்குண தேவ குமாரா! - உம்பர்கள் சந்ததம் போற்றும் சிங்காரா! சத்திய வேதவி னோதலங்காரா! - சதிசெய்யும் பேய் தலை சிதைத்த சிங்காரா! - நித்தம் 1.பட்சப் பரம குமாரனே, எங்கள் பாவந்தீரும் மாவீரனே ஸ்வாமி! அட்சய சவுந்தர ஆத்துமநாதா, அடியவர் துதிசெய்யும் ஆரணபோதா, ரட்சண்யச் சுப சுவி சேடப்பிரஸ்தாபா, ராசகெம்பீர, சங்கீத பொற்பாதா. - நித்தம் 2.சென்றாண்டெமை முகம் பார்த்தவா, ஒரு சேதம் விக்கின மறக் காத்தவா, - ஸ்வாமி! இன்றோர் புதுவரு டாரம்பங் கண்டோம், ஏக சந்தோஷ மாய்ச் சந்தித்துக் கொண்டோம்; குன்றா உமதுநல் லாவியை ஈந்து கூடவே இருந்தடியார் ஜெபங்கேட்டு, - நித்தம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nittham Arulsey Thayaalanae! - Enggal Naesaa Yaesu Manaalanae! - Svaami Nittham. Utthama Sarkuna Thaeva Kumaaraa! - Umbarkal Sandhatham Porrum Singkaaraa! Satthiya Vaedhavi Nodhalangkaaraa! - Sathiseyyum Paey Thalai Sithaittha Singkaaraa! - Nittham 1.patsap Parama Kumaaranae, Enggal Paavantheerum Maaveeranae Svaami! Atsaya Savundhara Aatthumanaathaa, Atiyavar Thuthiseyyum Aaranapothaa, Ratsanyach Suba Suvi Saedappirasthaapaa, Raasakempeera, Sangkeedha Porpaathaa. - Nittham 2.senraantemai Mugam Paartthavaa, Oru Saedham Vikkina Marak Kaatthavaa, - Svaami! Inror Puthuvaru Taarambang Kantom, Aega Santhosha Maaych Santhitthuk Kontom; Kunraa Umathunal Laaviyai Eenthu Koodavae Irundhatiyaar Jebangkaettu, - Nittham