பாடல் #3028
நிச்சயம் செய்குவோம்
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
நிச்சயம் செய்குவோம் வாரீர், - வதுவரர்க்கு நிச்சயம் செய்குவோம் வாரீர். 1.மெச்சும் கல்யாண குண விமலன் துணையை நம்பி இச்சிறு தம்பதிகள் இருவர் மணம் விரும்பி - நிச் 2.வாழ்க்கை வனத்தினிலே மலரும் மணமும் போலே மனையறம் நடத்திட மனம் இவர் கொண்டதாலே. - நிச் 3.செடியும் கொடியும் போலே உடலும் உயிரும் போலே, கடி மணவாழ்வில் வரக் கருத்திவர் கொண்டதாலே. - நிச் 4.இரவியும் கதிரும்போல் பாவுடன் ஊடும் போலே இருவரும் நீடூழி இனிது வாழப் பூ மேலே - நிச்