பாடல் #3007
நான் விடமாட்டேன்
🔤 Naan Vidamaattaen
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் விடமாட்டேன் என் இயேசுவை. வான் புவியாவும் போனாலும், - அத்தால் மயங்கியே ஒருக்காலும் மெய்யாய். - நான் 1.முந்தியென் மேலன்பு கூர்ந்தார்; இங்கே முக்யநன்மைதரச் சேர்ந்தார்; தீய எந்தனுக்காய்த் தம்மை யீந்தார்; எனக் கெண்ணருநன்மைகள் நேர்ந்தார்; மெய்யாய் - நான் 2.வானலோகந்தனைத் துறந்தார்; ஏழை மானிடனாகவே பிறந்தார்; மிக்க ஈனனெனக்காக இறந்தார்; பேய் மேல் என்றனுக்காய் ஜெயஞ்சிறந்தார்; மெய்யாய் - நான் 3.மேசியாவுக் கிணையுண்டோ? அவர் வேதத்துக்கொப்பு கற்கண்டோ? எனின் நேசர்சமுகம் பூச்செண்டோ? இந்த நீசனதில் மொய்க்கும் வண்டோ? மெய்யாய் - நான் 4.லோகமெனை உதைத்தாலும், பொல்லா லோபிகள் துஷ்டர் மொய்த்தாலும், பசி தாகநோயும் வதைத்தாலும், இந்தத் தாரணியோர் சிதைத்தாலும், மெய்யாய் - நான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Vidamaattaen En Yesuvai. Vaan Puviyaavum Ponaalum, - Atthaal Mayangkiyae Orukkaalum Meyyaay. - Naan 1.munthiyen Maelanpu Koornthaar; Ingkae Mukyananmaidharach Saernthaar; Theeya Endhanukkaayth Thammai Yeenthaar; Enak Kennarunanmaigal Naernthaar; Meyyaay - Naan 2.vaanalogandhanaith Thuranthaar; Aezhai Maanidanaagavae Piranthaar; Mikka Eenanenakkaaga Iranthaar; Paey Mael Endranukkaay Jeyanjsiranthaar; Meyyaay - Naan 3.maesiyaavuk Kinaiyunto? Avar Vaedhatthukkoppu Karkanto? Enin Naesarsamugam Poochsento? Indha Neesanathil Moykkum Vanto? Meyyaay - Naan 4.logamenai Uthaitthaalum, Pollaa Lopigal Thushtar Moytthaalum, Pasi Thaaganoyum Vathaitthaalum, Indhath Thaaraniyor Sithaitthaalum, Meyyaay - Naan