பாடல் #3004
நான் யோர்தான் கரையில் நின்று
🎙 கிறிஸ்தவ பாடல்
1. நான் யோர்தான் கரையில் நின்று கானானின் காட்சியை விழித்து நின்று நோக்கினேன் அங்கே என் பொக்கிஷம். இளைப்பாறுவோம் எழில் ராஜ்யத்தில் சற்று தூரத்தில் பசும் காட்சியை நாம் யாவரும் கண்டு சுகித்திடுவோம் மோசேயின் கீதம் பாடுவோம். 2. பரந்த சமவெளியில் நித்யம் ஜொலிக்குதே கிறிஸ்து அரசாள்கிறார் ராக்காலம் நீங்கிப் போயிற்றே. 3. நான் அந்த மேலோகத்திற்கு எப்போ போய் சேருவேன்? என் பிதாவின் முகத்தினை என்று தரிசித்திடுவேன்? 4. நான் ஆத்ம மகிழ்ச்சியினால் பூவுலகில் தங்கிடேன் யோர்தான் அலை புரண்டாலும் அஞ்சாமல் புறப்படுவேன்.