பாடல் #3003
நான் மோட்சப் பயணம் போகின்றேன்
🎙 கிறிஸ்தவ பாடல்
1. நான் மோட்சப் பயணம் போகின்றேன் என்னுடன் வருவார் யேசு. இப்பாதையின் மேன்மை கூறுவேன் என்னுடன் வருவார் யேசு. யேசு யேசு என்னுடன் வருவார் யேசு (2) 2. நான் பயமில்லாமல் போகலாம் என்னுடன் வருவார் யேசு. என் நெஞ்சின் மகிழ்ச்சி நிறைவாம் என்னுடன் வருவார் யேசு 3. அநேகத் தடைகள் சந்திப்பேன் என்னுடன் வருவார் யேசு. எல்லாவற்றையும் நான் மேற்கொள்வேன் என்னுடன் வருவார் யேசு. 4. நீயும் இப்பாதையில் சேருவாய் உன்னுடன் வருவார் யேசு. என்றென்றும் மோட்சத்தில் வாழுவாய் உன்னுடன் வருவார் யேசு.