பாடல் #2998
நான் புகழ்வேன்
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
நான் புகழ்வேன் கர்த்தரைப் புகழ்வேன் - என் ஜீவிய கால மெல்லாம் நான் புகழ்வேன் இயேசுவைப் புகழ்வேன் - என் ஜீவிய கால மெல்லாம் என் வேண்டுதலை அவர் கேட்டார் என் துன்பத்தினின்று மீட்டார் தூய வாழ்வே புகழ்ச்சி கீதம் தூய்மையாகவே நானும் வாழ்வேன் - 2 அன்று கல்வாரியில் நம் சுமைகளை தாங்கியவர் இன்று என் வாழ்விலே சுமைகளை தாங்கினார் மகிழ்ந்து பாடி மகிமை தேவனை நாளும் நானும் போற்றுவேன் அன்று அன்புடனே என்னை அழைத்த என் அன்பின்நேசர் இன்று அகில மெங்கும் வழி நடத்தி செல்கின்றார்