பாடல் #29892
தனிமையில் என் படகு
🎙 கிறிஸ்தவ பாடல்
தனிமையில் என் படகு தவித்து தவித்து ஓடுதையா துணையாய் யாருமில்லை தூக்கிவிட ஒருவரில்லை அலையின் வேகத்திலே படகு கவிழ்ந்தாலும் நங்கூரம் நீர் ஐயா நம்பியுள்ளேன் நான் ஐயா கரையை காணாமல் கண்கள் எல்லாம் குளமாச்சு கை தூக்கி நிறுத்தினீரே கரையை காண்பித்தீரே பரலோக கரை இறங்க பயணத்தை தொடருகிறேன் பரலோக கரை இறங்கி பாடி பாடி மகிழ்ந்திருப்பேன் தனிமையில் என் படகு இனிமையான ஓடுதையா துணையாய் நீர் வந்து தூக்கிவிட்டு மகிழ்ந்தீரே